தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ்-மகளிர் இரட்டையர் காலிறுதியில் சானியா ஜோடி
தாஷ்கன்ட்: தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா, இத்தாலியின் மரியா எலினா கேமரின் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
மகளிர் ஒற்றையர் சுற்றில் சானியா முதல் சுற்றிலேயே தோற்றுள்ள நிலையில் தற்போது இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சானியா-கேமரின் ஜோடி, உக்ரைன் சகோதரிகளான லியும்டிலா-நதியா கிசோனக் ஜோடியை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில், அலெக்சான்ட்ரா டுல்கெரு, மக்தலீனா ரிபேரிகோவா ஜோடியை சந்திக்கவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications