Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ்: பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் என 2 தொடரிலும் உலகின் முன்னணி வீரர் அல்காரஸ் விலகல்

பாரீஸ்: மணிக்கட்டு காயம் காரணமாக உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த மாதம் பார்சிலோனா ஓபனில் காயமடைந்த அல்கராஸ், இருமுறை சாம்பியனான பிரெஞ்சு ஓபனில் இருந்தும் வெளியேறினார். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற நிலையில், 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற இளம் டென்னிஸ் வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார்.

இது குறித்து தனது X தளத்தில் அல்கராஸ் பதிவிட்டது: "எனது உடல்நல மீட்புப் பணிகள் நன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன, நான் இப்போது மிகவும் நன்றாக உணர்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான் இன்னும் விளையாடும் அளவுக்குத் தயாராக இல்லை. அதனால்தான் குயின்ஸ் மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் இருந்து நான் விலக வேண்டியுள்ளது."

ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெற உள்ள விம்பிள்டன் தொடரை அவர் பங்கேற்கவில்லை முழு புல்வெளி மைதான சீசனிலும் அவர் பங்கேற்க மாட்டார். ஆகஸ்ட் மாத நேஷனல் பேங்க் ஓபனில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸ் ஜானிக் சின்னர் இடம் அல்காரஸ் தோற்றார். நடப்பு சாம்பியனான அல்காரஸ், பிரஞ்ச் ஓபனிலிருந்து விலகியுள்ளதால் ஜானிக் சின்னருக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாளில் சிறந்த பார்மில் உள்ளார். இதே போன்று ஜோகோவிச்சும் பார்ம்ப்ககு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, May 20, 2026, 10:09 [IST]
Other articles published on May 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+