ரியோ: ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸில் இந்தியாவின் சானியா- போபண்ணா இணை போராடி தோல்வி அடைந்தது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன்போபண்ணா இணை காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆண்டி முர்ரே-ஹீதர் வாட்சன் இணையை எதிர் கொண்டது.

இந்த ஆட்டத்தில் சானியா-போபண்ணா இணை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றது. இதன் மூலம் அரை இறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் - ராஜீவ்ராம் இணையை இன்று எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் சானியா - போபண்ணா இணை 6-2, 2-6, 3-10 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இதையடுத்து வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சானியா ஜோடி இன்று விளையாடுகிறது.