உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை மரியா ஷரபோவா

ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா, ஆண்டுக்கு ரூ. 120 கோடி வரை சம்பாதிக்கிறாராம். போர்ப்ஸ் இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
23 வயதான ஷரபோவா தனது 17வது வயதில் டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுத்தார். இன்ஸ்டன்ட் ஹிட் என்பது போல வந்த வேகத்தில் புயலாக மாறி புகழ் பெற்றார். விம்பிள்டன் பட்டத்தை 2004வது ஆண்டு அவர் வென்றபோது வயது 17தான்.
பின்னர் விளம்பரங்களிலும் பெரும் புகழ் பெற ஆரம்பித்தார். கேனான், மோட்டாரோலா, டிப்பானி, லேன்ட் ரோவர், கோல்கேட் பாமோலிவ் உள்ளிட்ட பல பிராண்டுகளின் மாடலாக நடித்துள்ளார்.
நைக் ஷூ நிறுவனத்துடன் அவர் செய்த ஒப்பந்தம்தான் இருப்பதிலேயே பெரியது. எட்டு வருட ஒப்பந்தமாக 70 மில்லியன் டாலருக்கு அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2வது பெரும் பணக்கார வீராங்கனையாக இருப்பவர் செரீனா வலி்லியம்ஸ். 3வது இடத்தில் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications