தமிழகத்திலிருந்து இன்னொரு சானியா மிர்சா? 15 வயதில் சாதித்த கோவை டென்னிஸ் வீராங்கனை.. சூப்பர் சம்பவம்
டெல்லி : சர்வதேச டென்னிஸ் சம்பளம் நடத்தும் ஐடி எஃப் ஜே 3 100 என்ற தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவதி என்ற 15 வயது டென்னிஸ் வீராங்கனை தர வரிசையில் உலகின் 60 ஆவது இடத்தில் இருக்கும் அடா குமுறு என்ற வீராங்கனையை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
மகளிர் டென்னிஸை பொறுத்தவரை இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் என்றால் அது சானியா மிர்சா தான். இளம் வயதிலே டென்னிஸ் உலகில் சூறாவளியை போல் வந்து அசத்தினார்.

தற்போது 15 வயதில் கோவையை சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவதி என்ற வீராங்கனை டென்னிஸ் உலகில் பட்டையை கிளப்பி வருகிறார். மகளிருக்கான தரவரிசை பட்டியலில் 139 வது இடத்தில் இருந்த மாயா தற்போது டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் நடத்தும் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகின் 60வது நிலை வீராங்கனையான அடா குமரு உடன் மாயா பலப் பரீட்சை நடத்தினார். போட்டியில் தொடர்ந்து ஆக்ரோஷமான தன்னுடைய ஷார்ட் தேர்வால், எதிர் வீராங்கனையை கடும் நெருக்கடிக்குள் மாயா ஆக்கினார். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் மாயா வெற்றி பெற, இரண்டாவது செட் ட்ரை பிரேக்கர் வரை சென்றது.
இதில் ஏழுக்கு ஆறு என்ற கணக்கில் மாயா வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது நிலை வீராங்கனையாக களமிறங்கிய துருக்கியைச் சேர்ந்த அடா குமுருவை மாயா முதல் ரவுண்டிலே வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் கால் இறுதியின் முந்தைய சுற்றுக்கு மாயா தகுதி பெற்றிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் ரிஷிதா ரெட்டி, ஐஸ்வர்யா யாதவ் போன்ற மற்ற இந்திய வீராங்கனைகளும் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு சென்று இருக்கிறார்கள். ஆடவர் பிரிவில் இந்தியாவின் சேர்ந்த அர்ஜுன் பண்டிட், சேகராஜ் சிங், ஆகியோர் தோல்வியை தழுவினர். தமிழக வீராங்கனை ஒருவர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாதித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications