For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி.. உலக சாதனை படைத்த சானியா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி

By Veera Kumar

சிட்னி: இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விஸ் நாட்டின் மார்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளது.

இந்த ஜோடி சிட்னியில் நடைபெறும், சிட்னி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சீனாவின் சென் லியாங் மற்றும் சுவாய் பென்க் ஜோடியை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தபோது, தொடர்ச்சியாக 28 போட்டிகளில் வென்ற சாதனையை படைத்தது.

The Sania and Martina pair now is unbeaten in 29 doubles matches

முன்னதாக, 1994ம் ஆண்டு, புவர்டோ ரிகான் ஜிகி பெர்னான்டஸ்-பெலாரஸ் நடாஷா இணை இந்த சாதனையை படைத்திருந்தது. எனவே அந்த சாதனை சமன் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பைனல் போட்டியிலும், சானியா ஜோடி வெற்றி பெற்று கோப்பையை வென்று அசத்தியதோடு, தொடர்ச்சியாக 29 போட்டிகளில் வென்று புதிய சாதனையை படைத்துள்ளது.

இன்றைய போட்டியில் சானியா இணை, ரலுகா ஒலரு மற்றும் யரோஸ்லவா ஷ்வெடோவா இணையை 4-6, 6-4, 10-8 ஆகிய செட் கணக்கில் வென்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Story first published: Thursday, January 14, 2016, 12:59 [IST]
Other articles published on Jan 14, 2016
English summary
The Sania and Martina pair now is unbeaten in 29 doubles matches and has overtaken the previous record of 28 matches by Puerto Rican Gigi Fernandez and Belarus' Natasha Zvereva in 1994.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+