ரோஜர் பெடரரையே தண்ணி குடிக்க வைத்த இந்திய இளம் வீரர்..! குவியும் பாராட்டுகள் #USOpen
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிசில், ஸ்டார் வீரர் ரோஜர் பெடரரை முதல் செட்டில் வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நாகல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில், முன்னணி வீரர் ரோஜர் பெடரரை இந்திய இளம் வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்.

ஆரம்பத்தில் அதிரடியாக விளங்கிய இளம் வீரர் சுமித் நாகல், பெடரருக்கு கடும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் தடுமாறிய பெடரர் சொதப்பி தள்ளினார். அதனை மிக அழகாக பயன்படுத்திய நாகல், முதல் செட்டை 6க்கு 4 புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த பெடரர் உடனே சுதாரித்துக் கொண்டார். 2வது செட்டில் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். வெற்றி பெற்றார். அதன்பின்னர் அபாரமாக விளையாடிய பெடரர் 2வது செட்டை 6க்கு 1 என்று கைப்பற்றினார்.
இருப்பினும், இந்த செட்டில் சுமித் நாகல் சிறப்பாகவே ஆடினார். பெடரர் தேவையற்ற வகையில் 33 தவறுகளை செய்தார். சுமித் நாகல் 19 தவறுகளையே செய்திருந்தார். பின்னர் 3வது செட்டையும் பெடரர் கைப்பற்றி, ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
1998ம் ஆண்டில் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிசின் பிரதான சுற்றில் கலந்து கொண்டனர். அதன் பிறகு, இப்போதுதான் 2 இந்திய வீரர்களான சுமித் நாகல், பிரஜ்னேஷ் ஆகியோர் பிரதான சுற்றில் பங்கேற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications