Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு ஜோகோவிக் தான்.. ரோஜர் பெடரர் ரெக்கார்ட் காலி.. யூஎஸ் ஓபனில் அபார சாதனை

நியூயார்க் : யூஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நோவாக் ஜோகோவிக் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதன் மூலம், ரோஜர் பெடரரின் மிகப் பெரிய சாதனையை முறியடித்து இருக்கிறார்.

2023 யூஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூ யார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிக் பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

US Open 2023 : Novak Djokovic shatters Roger Federer record with 47 Grandslam semi-finals

இந்த நிலையில், காலிறுதி சுற்று வரை எளிதாக முன்னேறிய அவர், காலிறுதியில் உள்ளூர் வீரரான டைலர் ஃப்ரிட்ஸ்-ஐ சந்தித்தார். ஃப்ரிட்ஸ் இதுவரை ஜோகோவிக்கை வீழ்த்தியதில்லை என்பதால் இந்தப் போட்டியில் ஜோகோவிக் எளிதில் வெல்வார் என்றே கணிக்கப்பட்டு இருந்தது.

அதற்கேற்றார் போல, ஃப்ரிட்ஸ் நிறைய தவறுகளை செய்து பாயிண்ட்களை கோட்டை விட்டுக் கொண்டு இருந்தார். பின்னர் 6 - 1, 6 - 4, 6 - 4 என்ற நேர் செட்களில் ஜோகோவிக் எளிதாக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் 47 வது முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

இதற்கு முன்னதாக, ரோஜர் பெடரர் 46 முறை கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். அந்த இமாலய சாதனையை தற்போது முறியடித்துள்ளார் ஜோகோவிக்.

மற்றொரு டென்னிஸ் ஜாம்பவான் ஆன ரபேல் நடால் 38 முறை கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். அவர் மட்டுமே அடுத்த சில ஆண்டுகளுக்கு ஜோகோவிக் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு பெற்ற ஒரே வீரர் ஆவார்.

Story first published: Wednesday, September 6, 2023, 8:34 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+