Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி.. அல்காரஸ் உடன் பலப்பரீட்சை

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டைலர் ஃப்ரிட்சை எதிர்கொண்ட ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் முதல் செட்டில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் முன்னிலையில் இருந்தார்.

அப்போது அமெரிக்க வீரரும் கம்பேக்கை கொடுத்தார். எனினும் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் ஜோகோவிச் 6க்கு 3 என்ற கணத்தில் வெற்றி பெற்றார். இந்த சூழலில் இரண்டாவது செட்டில் ஜோகோவிச் அபாரமாக விளையாடி புள்ளிகளை பெற்றார். எனினும் டைலர் பிரிட்ஸ் அதிரடி காட்ட இரண்டாவது செட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. எனினும் ஏழுக்கு ஐந்து என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

US Open 2025

இந்த தருணத்தில் மூன்றாவது செட்டில் அமெரிக்க வீரர் அபாரமாக விளையாடி மூன்றுக்கு ஆறு என்ற கணக்கில் தனதாக்கினார். இந்த நிலையில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தாம் சர்வ் பண்ணும்போது தேவையில்லாமல் கூச்சல் இடுகிறார்கள் என நடுவரிடம் ஜோகோவிச் புகார் அளித்தார். இதனால் அமெரிக்க ரசிகர்கள் கடுப்பாகி ஜோகோவிச் தொந்தரவு செய்தார்கள்.

எனினும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஜோகோவிச் நான்காவது செட்டில் 6க்கு 4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் 3 மணி நேரம் 24 நிமிடம் வரை நீடித்தது. இதன் மூலம் ஜோகோவிச் அரை இறுதிச்சுற்று ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற அல்காரசுடன் பலப் பரிட்சை நடத்த உள்ளார். ஜோகோவிச்சை கடந்த இரண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்காரஸ் வீழ்த்தி இருந்தார்.

ஆனால் அதன் பிறகு நடைபெற்ற கடைசி இரண்டு மோதல்களிலும் ஜோகோவிச் வென்றார். எனினும் அல்காரஸ் இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல் அரை இறுதி வரை வந்துள்ளார். இப்படி அவர் செய்தது இதுவே முதல் முறையாகும். நடப்பாண்டில் மட்டும் அல்காரஸ் 59 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் 38 வயதான ஜோகோவிச் தன்னுடைய 25 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோகோவிச் கால் இறுதி ஆட்டம் தமக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

இந்த போட்டி நிச்சயம் டைலருக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். நான் ஒவ்வொரு முறையும் சர்வ் அடிக்கும் போது போட்டியில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன். ஒவ்வொரு பந்திற்கும் நான் கடுமையாக போராடினேன். இது போன்ற ஆட்டங்களில் சில முக்கிய புள்ளிகள் தான் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் என்று கூறினார். ஜோகோவிச்சுடன் விளையாடுவது குறித்து பேசி உள்ள அல்காரஸ், தமக்கு டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று நான் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த தான் இங்கு வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 3, 2025, 12:38 [IST]
Other articles published on Sep 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+