Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன் 2025..முடிவுக்கு வந்ததா ஜோகோவிச் டென்னிஸ் வாழ்க்கை? அரையிறுதியில் அக்வாரஸ் உடன் தோல்வி

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் மீண்டும் தோல்வியை தழுவினார். இதன்மூலம் நடப்பாண்டில் எந்த ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்ல முடியாமல் ஜோகோவிச் தடுமாறி வருகிறார்.

38 வயதான ஜோகோவிச்,இதன் மூலம் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இதுவரை 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், இதுவரை அதிக பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை படித்திருக்கிறார்.

US Open 2025

இந்த நிலையில் 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக ஜோகோவிச் கடுமையாக முயற்சித்து வருகிறார். ஆனால் வயது மூப்பு காரணமாக அவரால் பழைய ஆட்டத்தை எதிர்கொள்ள முடியவில்லை இந்த நிலையில் 22 வயதான ஸ்பெயினைச் சேர்ந்த அல்காரஸ் உடன் ஜோகோவிச் அரையிறுதி ஆட்டத்தில் மோதினார்.

அல்காரசுடன் ஏற்கனவே ஜோகோவிச் கடந்த காலங்களில் தோல்வியை தழுவிய நிலையில் கடைசியாக இரண்டு முறை மோதிய போது ஜோகோவிச் வெற்றி பெற்றார்.ஆனால் இந்த தொடரில் அல்காரஸ் ஒரு செட்டை கூட இழக்காமல் தொடர்ந்து அரை இறுதி வரை வந்துள்ளார். இதனால் ஜோகோவிச்சுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது.

முதல் செட்டில் அல்காரஸ் தன்னுடைய இளமையை பயன்படுத்தி ஆறுக்கு நான்கு என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதை அடுத்து இரண்டாவது செட்டில் ஜோகோவிச் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்பும் அவரால் பழையபடி செட்டை கைப்பற்ற முடியவில்லை . முக்கியமான கட்டத்தில் சில தவறுகளை செய்துதான் மீண்டும் இரண்டாவது செட்டை அல்காரஸ் ஏழுக்கு ஆறு என்ற கணக்கில் டை பிரேக்கரில் வென்றார்.

இந்த நிலையில் ஜோகோவிச், மூன்றாவது செட்டில் உடல் சோர்வை அடைந்தார். மேலும் அவருக்கு கழுத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் மூன்றாவது செட்டில் தடுமாறினார். இதனை பயன்படுத்திக் கொண்டு அல்காரஸ் ஆறுக்கு இரண்டு என்ற கணக்கில் வெல்ல ஜோகோவிச் 6க்கு 4,7 க்கு 6, 6க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இறுதி சுற்றுக்கு அல்காரஸ் தகுதி பெற்றுள்ளார்.இந்த போட்டி இரண்டு மணி நேரம் 23 நிமிடம் நீடித்தது. அல்காரஸ் போட்டிகளில் முதல் இரண்டு செட்களை வெற்றி பெற்றால் கடந்த 52 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தோல்வியே தழுவியது இல்லை என்ற நிலையில் பெற்றுள்ளார்.

தனது தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோகோவிச், "இந்த வீரர்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.இன்று என்னால் முடியவில்லை. என்னுடைய சக்தி அனைத்தையும் இழந்து விட்டேன். மேலும் இந்த அளவுக்கு என்னால் டென்னிஸ் விளையாட முடிகிறது என்று நினைத்து மகிழ்ச்சியை அடைகிறேன். டென்னிஸ் எப்போதுமே உடலைச் சார்ந்த விளையாட்டாக தான் இருக்கின்றது" என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 6, 2025, 6:28 [IST]
Other articles published on Sep 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+