Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபனில் 40 வயது கேல் மான்பில்ஸ் 20 வயது வீரரிடம் தோல்வி.. இகா, கோகோ, நவோமி வெற்றி

நியூயார்க்: 2026 அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்று முன்னேறிய நிலையில், சில அதிர்ச்சித் தோல்விகளும் அரங்கேறின. ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் பிரான்சின் 40 வயது மூத்த வீரர் கேல் மான்பில்ஸ், அமெரிக்காவின் 20 வயது வீரர் லர்னர் தியெனுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் துடிப்பாக ஆடிய தியென் 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் மான்பில்சை வீழ்த்தினார். இந்த தோல்வியுடன் 18 முறை அமெரிக்க ஓபனில் பங்கேற்ற மான்பில்ஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இருந்து விடை பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் 6-7, 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 3வது வரிசை வீரரான கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை வீழ்த்தி வெளியேற்றினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க நட்சத்திரம் கோகோ காப் மற்றும் ஸ்பெயினின் பவுலா படோசா மோதிய ஆட்டம் அனல் பறந்தது. இதில் அபாரமாக போராடிய கோகோ காப் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் படோசாவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். முன்னாள் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என எளிதாக நடியா பொடோரோஸ்காவை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினார்.

US Open 2026 Coco Gauff Iga Swiatek Advance as Gael Monfils Bids Emotional Farewell

ஜப்பானின் நவோமி ஒசாகா கடுமையான இழுபறிக்குப் பின் 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சினியாகோவாவை வீழ்த்தினார். 2வது செட்டை இழந்த பின், தீவிரமாக ஆடி வெற்றியை தன்வசமாக்கினார். இதேபோல் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், அமாண்டா அனிசிமோவா ஆகியோரும் கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றியை தக்கவைத்துக் கொண்டனர்.

“வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறோம்.. சச்சின் போல..”.. பிசிசிஐ செயலாளர் பேச்சு

“வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறோம்.. சச்சின் போல..”.. பிசிசிஐ செயலாளர் பேச்சு

ரஷ்யாவின் இளம் நட்சத்திரம் மிர்ரா ஆண்ட்ரீவா ஜெர்மனியின் இவா லைசை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா உக்ரைனின் ஒலெக்ஸாண்ட்ரா ஒலினிகோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பைனலில் வைபவ் சூர்யவன்ஷி ஆடணுமா இல்லையான்னு சொல்லப் போவதே கம்பீர்தான்.. துலீப் டிராபி சிக்கல்

Also Read

பைனலில் வைபவ் சூர்யவன்ஷி ஆடணுமா இல்லையான்னு சொல்லப் போவதே கம்பீர்தான்.. துலீப் டிராபி சிக்கல்
Story first published: Friday, September 4, 2026, 8:51 [IST]
Other articles published on Sep 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+