Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன் 2026.. மெத்வதேவ், ஜெசிகா பெகுலா ஜோடி அபார வெற்றி.. சில அதிர்ச்சித் தோல்விகள்

நியூயார்க்: டென்னிஸ் உலகின் முக்கிய கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் டேனில் மெத்வதேவ் மற்றும் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை ஜெசிகா பெகுலா ஆகியோர் தங்களது தொடக்க ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் 7-வது வரிசை வீரரான ரஷ்யாவின் மெத்வதேவ், பிரான்ஸ் வீரரான ஹியூகோ காஸ்டனை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்றார். கடந்த 2021 சாம்பியனான மெத்வதேவ், சமீபத்திய மொன்றியல் மற்றும் சின்சினாட்டி தொடர்களில் ஆரம்பத்திலேயே வெளியேறி ஏமாற்றமளித்த நிலையில், இந்த வெற்றி அவருக்கு உத்வேகமாக அமைந்தது.

US Open 2026 Daniil Medvedev and Jessica Pegula Secure Comfortable First-Round Victories

மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை ஜெசிகா பெகுலா, ருமேனியாவின் எலினா ரூஸை எதிர்கொண்டார். தொடக்கத்தில் சற்று தடுமாறி முதல் 9 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை இழந்தாலும், பின்னர் சுதாரித்துக் கொண்ட பெகுலா 83 நிமிடங்களில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். கடந்த 2024ல் ரன்னர்-அப் பட்டம் வென்ற பெகுலா, தனது 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் அல்லது சோபியா கெனின் ஆகியோரில் ஒருவருடன் மோத உள்ளார்.

உலகக் கோப்பை ஹாக்கி.. பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்த ஜெர்மனி.. ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியனானது

உலகக் கோப்பை ஹாக்கி.. பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்த ஜெர்மனி.. ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியனானது

முதல் நாளில் சில ஆட்டங்களில் அதிர்ச்சித் தோல்விகளும் அரங்கேறின. 27-வது வரிசை வீராங்கனையான பார்போரா கிரெஜ்சிகோவா 6-7, 2-6 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவிடம் தோல்வியடைந்தார். அதே நேரத்தில், 19-வது வரிசை வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சுலோவேனியாவின் வெரோனிகாவை 6-3, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி தப்பினார். இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் தொடர் 15 நாட்கள் அட்டவணையில் நடத்தப்படுகிறது. மேலும், டென்னிஸ் வரலாற்றிலேயே மிக அதிகமாக 108 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை இந்த தொடருக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 31, 2026, 8:45 [IST]
Other articles published on Aug 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+