Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

US Open: ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி.. பாதி போட்டியில் கண்ணீர் விட்டு அழுகை

நியூயார்க்: டென்னிஸ் உலகின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், 2026 அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். அர்ஜென்டினாவின் மரியானோ நவோனிடம் அவர் தோல்வி அடைந்தார். போட்டி முடிந்த பின் ஜோகோவிச் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நியூயார்க்கில் நடைபெற்ற இப்போட்டியில், 4-வது வரிசை வீரரான 39 வயது ஜோகோவிச், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டார். நியூயார்க்கின் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அவதிப்பட்ட அவர், 3-வது செட்டின் போது மைதானத்திலேயே பலமுறை வாந்தி எடுத்தார். மருத்துவர்கள் அவருக்கு மாத்திரைகள் மற்றும் ஊட்டச்சத்து திரவங்களை வழங்கிய போதும், அவரால் முழுமையாக மீள முடியவில்லை.

US Open 2026 Novak Djokovic Breaks Down in Tears After Devastating First-Round Defeat

முதல் செட்டை டைபிரேக்கரில் இழந்த ஜோகோவிச், போராடி அடுத்த இரண்டு செட்களை 7-5, 6-4 என வென்றார். ஆனால், ஆட்டம் 5-வது செட்டிற்குச் சென்றபோது, அவர் உடல் ரீதியாக முழுமையாக சோர்ந்து போனார். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ஆட்டத்தில், நியூயார்க் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஜோகோவிச்சை உற்சாகப்படுத்த முயன்றனர்.

ஆனால், அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. 5-வது செட்டில் 1-4 என பின்தங்கியிருந்த போது, உடல் வலியாலும் ஏமாற்றத்தாலும் ஜோகோவிச் மைதானத்திலேயே கதறி அழுதார். கேலரியில் இருந்த அவரது மனைவி ஜெலினாவும் இந்த காட்சியைப் பார்த்து கலங்கினார். இறுதியில் அர்ஜென்டினாவின் நவோன் 6-7, 7-5, 6-4, 2-6, 1-6 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார்.

அபிஷேக் சர்மா மரண அடி.. 26 பந்துகளில் 7 சிக்ஸ், 6 ஃபோர்.. ஷேர்-இ-பஞ்சாப் டி20 தொடரில் சரவெடி

அபிஷேக் சர்மா மரண அடி.. 26 பந்துகளில் 7 சிக்ஸ், 6 ஃபோர்.. ஷேர்-இ-பஞ்சாப் டி20 தொடரில் சரவெடி

இந்த தோல்வியின் மூலம், ஜோகோவிச்சின் 25-வது கிராண்ட்ஸ்லாம் கனவு தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது. மேலும், கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் முதல் சுற்றில் தொடர்ந்து 78 போட்டிகளில் வென்றிருந்த அவரது சாதனையும் முடிவுக்கு வந்தது. இதற்கு முன்பு கடந்த 2006 ஆஸ்திரேலிய ஓபனில் அவர் முதல் சுற்றில் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தொடருக்கு முன்பாக சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரிலும் அர்ஜென்டினாவின் தியாகோவிடம் ஜோகோவிச் தோற்று வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன் 2026.. மெத்வதேவ், ஜெசிகா பெகுலா ஜோடி அபார வெற்றி.. சில அதிர்ச்சித் தோல்விகள்

Also Read

அமெரிக்க ஓபன் 2026.. மெத்வதேவ், ஜெசிகா பெகுலா ஜோடி அபார வெற்றி.. சில அதிர்ச்சித் தோல்விகள்
Story first published: Monday, August 31, 2026, 9:56 [IST]
Other articles published on Aug 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+