Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. பயஸ், போபண்ணா ஏமாற்றம்.. சானியா மிர்சா அபாரம்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் லியாண்டர் பயஸ் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். அதேநேரம், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்தியா-ஜெர்மன் வீரர்களான லியாண்டர் பயஸ்-ஆன்ட்ரே பேகேமான் ஜோடி, பிரான்ஸ்-இஸ்ரேல் ஜோடியான ஸ்டீபன் ராபர்ட்-துடி செலா ஜோடியிடம் 6-2, 5-7, 5-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

US Open: Leander Paes, Rohan Bopanna lose; Sania Mirza wins

இதேபோல, இந்திய-டென்மார்க் ஜோடியான ரோகன் போபன்னா-ஃப்ரெடெரிக் நெல்சன் ஜோடி, அமெரிக்க-நியூசிலாந்து ஜோடியான ப்ரியன் பகர்-மார்கஸ் டேனியல் ஜோடியிடம், 6-2, 7-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தது.

அதேநேரம், கலப்பு இரட்டையர் போட்டியில், குரோஷிய ஜோடியான இவான் டோடிக்குடன் இணைந்து, ஆடிய இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்க கலப்பு ஜோடியான டைலர் டவுன்சென்ட் மற்றும் டொனால்ட் யங் ஆகியோரை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Saturday, September 3, 2016, 11:49 [IST]
Other articles published on Sep 3, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+