Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டென்னிஸ் களத்தில் செரீனா வில்லியம்ஸுடன் மோதினார் மிஷல் ஒபாமா

Michelle Obama and Serena Williams
நி்யூயார்க்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, நியாயூர்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக் களத்திற்கு வருகை தந்தார். அங்கு அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸுடன் டென்னிஸும் ஆடி அசத்தினார்.

கை தேர்ந்த வீராங்கனைகளைப் போல ஆடிய மிஷல், மணிக்கு 55 மைல்கள் வேகத்திலான சர்வீஸையும் போட்டு அனைவரையும் வியக்க வைத்தார்.

இளம் சிறார்களிடையே உடல் பருமனைக் குறைக்கும் விழிப்புணர்வுப் பிரசாரத்தைக்க கையெடுத்துள்ளார் மிஷல். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்களத்திற்கு வந்தார். அங்கு இளைஞர்கள், இளம் பெண்கள், சிறார்களுடன் அவர் கலந்துரையாடினார்.

பின்னர் செரீனாவுடன் ஒரு ஆட்டமும் போட்டார். கை தேர்ந்த வீராங்கனைகளைப் போல அவர் ஆடியதைப் பார்த்து அனைவரும் அதிசயித்தனர். பின்னர் மிஷல் பேசுகையில், டென்னிஸைப் போல அழகானது வேறு எதுவும் இல்லை. அதை நாம்அனுபவித்து விளையாட வேண்டும். எனக்கு டென்னிஸ் மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் நான் திறமையானவளா என்பது கேள்விக்குறிதான் என்றார் மிஷல்.

பின்னர் சிறார்களுடன் இணைந்து டென்னிஸ் வீடியோ கேம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட இன்டோர் விளையாட்டுக்களில் மிஷல் பங்கேற்றார்.

மிஷல், ஒபாமாவுடன் ஏழுமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான அமெரிக்க வீரர் ஜான் மெக்கன்ரோவும் டென்னிஸ் விளையாடினார். அப்போது மிஷலுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார் மெக்கன்ரோ.

இந்த விசிட்டுக்குப் பின்னர் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடந்த ஆடவர் காலிறுதிப் போட்டிகளைக் கண்டு களித்தார் மிஷல். அவருடன் பில்லி ஜீன் கிங், ஜேம்ஸ் பிளேக், காத்ரீனா ஆதம்ஸ் ஆகிய வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:50 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+