சானியா அபாரம்.. யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் இறுதியில் புகுந்தார்!
நியூயார்க்: இந்தியாவின் சானியா மிர்ஸா, ப்ரூனோ சோரஸ் ஜோடி, அமெரிக்க ஓபன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்த ஜோடி, சீன தைபே - பிரிட்டிஷ் இணையான சான், ராஸ் ஹட்சின்ஸ் ஜோடியா 7-5. 4-6, 10-7 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பிடித்தது.
மிர்ஸாவும், சோரஸும் இணைந்து ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
இறுதிப் போட்டியில் சானியா வென்றால் அது அவருக்கு 3வது இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். முன்னதாக மகளிர் இரட்டையர் அரை இறுதிக்கு சானியா - காரா பிளாக் இணை தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, September 4, 2014, 13:10 [IST]
Other articles published on Sep 4, 2014


Click it and Unblock the Notifications