யு.எஸ். ஓபன்: 2வது சுற்றில் சானியா
நியூயார்க்:அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா முன்னேறியுள்ளார்.
நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் அவர் எஸ்டோனிய வீராங்கனை கயா கனேபியை சந்தித்தார். இப்போட்டியில் 6-2, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் சானியா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
2வது செட்டில் சற்றே தடுமாறினாலும் கூட 3வது செட்டை எளிதாக கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.
2வது சுற்றில் 60வது நிலை வீராங்கனை லாரா கிரன்வில்லியை சந்திக்கிறார் சானியா.
Story first published: Wednesday, December 7, 2011, 17:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications