Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

US open 2023 - நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி.. 3வது சுற்றுக்கு அல்காரஸ் தகுதி

நியூ யார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரான பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். ஆண்டி முர்ரே 2019 ஆம் ஆண்டு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

அதன் பிறகு ஆண்டி முர்ரே ஒருமுறை கூட கிராண்ட்ஸ்லாம் தொடரின் நான்காவது சுற்றுக்கு கூட செல்லவில்லை. எனினும் தொடர்ந்து விளையாடி வரும் ஆண்டி முர்ரே அமெரிக்க ஓபன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 19 ஆவது நிலை வீரரான பல்கேரியாவை சேர்ந்த டிமிட்ரோ உடன் ஆண்டி முர்ரே பலப்பரீட்சை நடத்தினார்.

US open tennis 2023 - Andy Murray knocked out as carlos goes through 3rd round

இதில் 6க்கு 3, 6க்கு 4 ,6 க்கு ஒன்று என்ற நேர் செட் கணக்கில் ஆண்டி முர்ரே தோல்வியைத் தழுவினார். இது குறித்து பேசிய ஆண்டி முர்ரே நான் எப்படி விளையாட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தேனோ, அதை போல் விளையாட முடியாமல் போவது நிச்சயம் ஏமாற்றம் அளிக்கிறது.
என்னுடைய காயத்திற்கு பிறகு மீண்டும் இதுபோன்ற கடுமையான போட்டிகளில் விளையாட முடியவில்லை.

இனி கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிச்சுற்று வரை செல்வது என்பது கடினம் என்பதை நான் உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனினும் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவேன் என மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆண்டி முர்ரே கூறியுள்ளார்.இதேபோன்று நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்காரஸ் தன்னுடைய இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹாரிஸை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6க்கு 3, 6க்கு 1, ஏழுக்கு ஆறு என்ற நேர் செட் கணக்கில் ஹாரிஸை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதில் அவர் பிரிட்டனை சேர்ந்த டன் எவன்சை எதிர்கொள்ள உள்ளார். இதேபோன்று அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான ஜான் இஸ்னர் தன்னுடைய கடைசி டென்னிஸ் தொடரில் விளையாடுவதாக அறிவித்திருந்த நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சக நாட்டு வீரரான மைக்கிலிடம் தோல்வியை தழுவி விடை பெற்றார்.

Story first published: Friday, September 1, 2023, 9:58 [IST]
Other articles published on Sep 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+