Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எது நடாலுக்கு நியூயார்க் நகரம் உறங்கும் வேலையிலா? இது நம்ம பையன் வேலை தான்.. பிரபலமாகும் அட்மின்

நியூயார்க்: 2022ஆம் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 29ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த தொடரை பிரபலப்படுத்தும் வகையில், சமூக வலைத்தளத்தில் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு பதிவு என்ற யுத்தி கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

அதாவது இந்தியாவில் மட்டும் சமூக வலைத்தளத்தில் தெரியும் மாதிரி ஒரு பதிவும், அதே பதிவு சீனாவில் வேறு வாக்கியங்களுடன் இடம்பெறும் வகையில், சமூக வலைத்தள பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

வசூல் ராஜா வசனம்

வசூல் ராஜா வசனம்

இதன் மூலம் அந்த குறிப்பிட்ட இடத்தின் பிரபலமான பாடல்கள், வசனத்தை கொண்டு பிரத்யேமாக, சமூக வலைத்தள அட்மின்கள் பதிவிட்டு வருகின்றனர். விம்பிள்டன் தொடரை காண ரோஜர் பெடரர் வந்த போது , வாத்தி கம்மிங் என விஜய் படத்தின் பாடலை போட்டு பதிவிட்டனர், இதே போன்று அண்மையில் கூட அமெரிக்க ஓபன் டிவிட்டர் தளத்தில் கட்டிப்புடி வைத்தியம் என்று வசூல் ராஜா படத்தில் உள்ள பிரபல வசனத்துடன் பதிவிட்டனர்.

ஏஆர் ரஹ்மான் பாடல்

ஏஆர் ரஹ்மான் பாடல்

இந்த நிலையில், தற்போது அமெரிக்க ஓபன் வரும் 29ஆம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, நடாலின் புகைப்படத்தை போட்டு நியூயார்க் நகரம் உறங்கும் வேலையில் என்ற சில்லுனு ஒரு காதல் படத்தின் பாட்டு வரியை போட்டு, தமிழக ரசிகர்களை அட்மின் குதுகலப்படுத்தியுள்ளார்.இதன் மூலம் தமிழக இளைஞர்களிடையே ஹச். ராஜாவின் அட்மினுக்கு பிறகு அமெரிக்க ஓபன் அட்மின் தான் தற்போது பிரபலமாகி இருக்கிறார்.

காரணம் என்ன

காரணம் என்ன

சரி, ஏன் நடாலுக்கு ஒரு மாஸ் பாடலை போடாமல் ஒரு சோக பாடலை அட்மின் போட்டு இருக்கிறார் என்று நீங்கள் எண்ணலாம். அதற்கு காரணம் இருக்கிறது. விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக விலகிய நடால், தற்போது 2 மாதத்திற்கு பிறகு அமெரிக்க ஓபன் தொடருக்கு தயாராகி வருகிறார்.

ஜோகோவிச் என்னாச்சு?

ஜோகோவிச் என்னாச்சு?

இதற்காக சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்கிய நடால், தனது முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவினார். இது நடாலுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடால், தனது அன்பு மனைவியை நினைத்து பாடி இருப்பது போல் அட்மின் அந்த பதிவை போட்டுள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்தாத நிலையில், அவர் அமெரிக்க ஓபனில் பங்கு பெறுவது கேள்விகுறியாகி உள்ளது.

Story first published: Saturday, August 20, 2022, 23:09 [IST]
Other articles published on Aug 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+