Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்னம்மாவை விடுங்க.. "பெரியம்மா" தோத்துப் போயிட்டாங்க பாருங்க!

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் பட்டம் வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்தார், பெரியம்மா, வீனஸ் வில்லியம்ஸ்.

இந்தாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவில், 36 ஆண்டுகளுக்கு பிறகு, அரை இறுதிக்கு முன்னேறிய நால்வருமே அமெரிக்க வீராங்கனைகள் என்ற சாதனை புரியப்பட்டிருந்தது.

செவன் டைம்

செவன் டைம்

இதில், 37 வயதாகும் வீனஸ் வில்லியம்ஸ் மட்டுமே இதற்கு முன் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர். இதுவரை, ஏழு கிராண்ட் ஸ்லாம் வென்றவர், 2008க்கு பிறகு, பட்டம் ஏதும் வெல்லவில்லை. சமீபத்தில் பெரியம்மா ஆன வீனஸ்தான் இந்த முறை பட்டம் வெல்வார் என்று மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

அதிர்ச்சித் தோல்வி

அதிர்ச்சித் தோல்வி

நேற்று இரவு நடந்த அரை இறுதிப் போட்டியில், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 6-1, 0-6, 7-5 என்று கடினமாக போராடி, வீனஸை வென்றார். முதல் முறையாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிக்கு அவர் நுழைந்துள்ளார். 2013ல் ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு நுழைந்ததே அவருடைய அதிகபட்ச வெற்றியாக இருந்தது.

மற்றொரு அரை இறுதி

மற்றொரு அரை இறுதி

மற்றொரு அரை இறுதியில் கோகோ வாண்டவேகேய, மேடிசன் கெய்ஸ் வென்று இறுதிக்கு நுழைந்தார். மிகவும் பரபரப்பான ஆட்டத்தில், வீனஸ், 51 எரர்களை செய்தது, அவருடைய தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

வரலாறு படைக்க முடியாமல் போனது

வரலாறு படைக்க முடியாமல் போனது

யுஎஸ் ஓபன் வரலாற்றிலேயே, இறுதிப் போட்டியில் பங்கேற்ற அதிக வயதான வீராங்கனை என்ற பெருமை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர் மிஸ் செய்துவிட்டார்.

Story first published: Friday, September 8, 2017, 18:05 [IST]
Other articles published on Sep 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+