பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ்-வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவி்ல் முதல் சுற்று போட்டியில் பிரான்சு வீரர் டசோங்கோ ஜெர்மனி வீரர் பிராண்ட்சை 4-6, 6-3, 6-2, 6-7, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
பெண்கள் முதல் சுற்றுப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் சுவிட்சர்லாந்து வீராங்கனை பட்டிசி சென்டரை 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை நாடியா பெட்ரோவா சீன வீராங்கனை ஷாங்ஷாய்யை 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இன்னொரு ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை பென்னட்டா இங்கிலாந்து வீராங்கனை அன்னியை 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications