Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியின்போது திடீரென சுருண்டு விழுந்து இறந்த ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை!

மாஸ்கோ: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை வைலட்டாடெஜிடிரேவா பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பால் இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் நகரில் பிறந்த வைலட்டா டெஜிடிரேவா, உலக அளவில் டென்னிஸ் வீரர்கள் வரிசை பட்டியலில் 1084வது இடத்தில் உள்ளார். இறுதியாக துருக்கியில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இவர் கலந்து கொண்டார்.

Violetta Degtiareva drops dead at tennis practice

வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான வைலட்டா டெஜிடிரேவா, தனது அபாரா ஆட்டத்தால் இவரது விளையாட்டு திறமை படிப்படியாக உலகிற்கு தெரியவந்து கொண்டிருந்தது. எனவே, அவர் பிரபல வீராங்கனை, அன்னா குர்னிகோவா போலவருவார் என்று ரஷ்ய ஊடகங்கள் கொண்டாடின. இந்நிலையில், பயிற்சியின்போது டெஜிரரேவா மரணம் அடைந்துள்ளார்.

இவரது மரணம் குறித்து அவரின் நெருங்கிய சக டென்னிஸ் வீராங்கனையான அனஸ்டாசியா அவரது பேஸ்புக்கில் இதனை தெரிவித்துள்ளார்.

அதில், வைலட்டா டெஜிடிரேவா மரணம் என்னால் நம்பமுடியவில்லை. இருப்பினும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, January 23, 2015, 14:18 [IST]
Other articles published on Jan 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+