
வெள்ளை நிறமே .. கொள்ளை அழகே
எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறம் என்பதால் ஏதோ தேவலோகத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும்.

ஒவ்வொருவரும் ஒரு தேவதை
இங்கு வீரராக இருந்தாலும் சரி, வீராங்கனையாக இருந்தாலும் சரி பாரதிராஜா பட தேவதை போல மாறியாக வேண்டும். எல்லோருக்குமே வெள்ளை உடைதான்.

வெண்மையாக ஜொலிக்கும் கருப்பு வைரம்
கலக்கலாக டிரஸ் போடுவதில் புதிய சரித்திரம் படைக்கும் செரீனா வில்லியம்ஸை விம்பிள்டன் போட்டியில் மட்டும் ரொம்ப வித்தியாசமாக பார்க்க முடியும். வழக்கமான கவர்ச்சி செரீனா இங்கு தென்பட மாட்டார்.

கன்ட்ரோல்.. கன்ட்ரோல்
வழக்கமாக செரீனா விளையாடும்போது அவரது உடையையும், அவரது உடலையும்தான் ரசிகர்கள் பலர் பார்க்க வருவார்கள். ஆனால் விம்பிள்டனில் வெள்ளை உடையில் ஜம்மென்று கம்பீரமாக காணப்படுவார் செரீனா.

சரி ஏன் இந்த வெள்ளை
சரி விம்பிள்டன் போட்டிகளில் வெள்ளை நிறம் கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது என்று தெரியுமா. அதற்கும் ஒரு வரலாற்றுக் காரணம் உள்ளது.

உள்ளே.. வெளியே
வெள்ளை நிறம் என்றால் வெளியில் மட்டும் அல்ல,. உள்ளாடைகளும் கூட வெள்ளை நிறத்தில்தான் இருக்க வேண்டும். அதேபோல ஷூவிலும் கூட வெள்ளை மட்டுமே இருக்க வேண்டும்.

கட்டாயம்.. கம்பல்சரி
வெள்ளை நிறம் என்பது விம்பிள்டனில் மிகக் கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. இதிலிருந்து மீறுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தடை விதித்து விடுவார்கள்.

1800களிலிருந்து
இந்த ஆடை நிறக் கட்டுப்பாடு என்பது இன்று நேற்று அல்ல 1800களிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது டென்னிஸ் என்பது ஒரு சமூக அந்தஸ்துடன் கூடியதாக இருந்தது. விளையாட்டு போல இருந்ததில்லை.

வெள்ளை நிறத்தில்தான் வருவார்கள்
அந்தக் காலத்தில் சமூக நிகழ்ச்சிகளுக்கு வருவோர் பெரும்பாலும் வெள்ளை நிற டிரஸ்ஸில்தான் வருவார்கள். எனவேதான் விம்பிள்டன் டென்னிஸிலும் வெள்ளை நிற சீருடை அறிமுகமானது.

கிரிக்கெட்டிலும் அப்படித்தான்
இதேபோலத்தான் இங்கிலாந்தில் அவதரித்த கிரிக்கெட்டிலும், வெள்ளை நிற சீருடை அறிமுகமானது. இப்போது கலர் கலர் யூனிபார்மில் விளையாடினாலும் கூட டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தூய வெள்ளை நிற சீருடைதான் தொடர்ந்து அமலில் உள்ளது என்பதை அறியலாம்.

அமெரிக்க ஓபன் போட்டியிலும்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கூட 1972ம் ஆண்டு வரை வெள்ளை நிறத்தைக் கடைப்பிடித்து வந்தது. ஆனால் 72ல் அது தளர்த்தப்பட்டது. இருப்பினும் விம்பிள்டன் மட்டும் தனது பாரம்பரியத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறது.
விம்பிள்டனைப் பொறுத்தவரை கறை நல்லதில்லை...!


Click it and Unblock the Notifications











