For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டென்னிஸ் விளையாட்டின் புதிய கிங்.. யார் இந்த அல்காரஸ்? ஜோகோவிச்சையே கதிகலங்க வைத்த இளம் வீரர்!

லண்டன்: 23 கிராண்ட்ஸ்லாம் விருதுகளை வென்ற நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்று சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அல்காரஸ். இவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

நடாலின் காயம், ஃபெடரரின் ஓய்வு.. டென்னிஸின் தனிபெரும் அரசனாக ஜோகோவிச்சை மாற்றியது. ஜோகோவிச் அனைவருக்கும் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார் என்பதைவிடவும் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆனால் ஜோகோவிச்சின் ஆதிக்கம் டென்னிஸ்-க்கு மட்டுமல்ல, அவருக்குமே பிரச்சனை தான். அந்த ஆதிக்கத்தை தடுக்க டென்னிஸ் கடவுள்களால் அனுப்பப்பட்ட வீரர் தான் அல்காரஸ்.

Who is Carlos Alcaraz? How did he beat Novak Djokovic in the Wimbledon Final 2023

ஃபெடரர் உச்சத்தில் இருந்த போது ஸ்பெயினில் இருந்து எப்படி நடால் வந்தாரோ, அதேபோல் உச்சத்தில் உள்ள ஜோகோவிச்சை தடுக்க அதே ஸ்பெயின் நாட்டில் இருந்து அல்காரஸ் வந்திருக்கிறார். நேற்றைய ஆட்டம் முடிவடைந்த பின் ஜோகோவிச், அல்காரஸ் எனக்கு கிளே கோர்ட் மற்றும் ஹார்ட் கோர்ட்டில் மட்டுமே சவாலாக இருப்பார். ஒருநாளும் புல் தரையில் ஆட்டத்தில் சவால் அளிக்க மாட்டார் என்று நம்பியிருந்தேன்.

ஆனால் எனது எண்ணத்தை மாற்ற வைத்துவிட்டார் என்று கூறியுள்ளார். ஜோகோவிச் சரியாகவே கணித்து வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அல்காரஸின் ஆட்டம் முழுக்க முழுக்க கிளே கோர்ட்டுக்கு ஒத்துப்போகும் பாணியிலானது. கிட்டத்தட்ட நடாலின் ஆட்டத்தைப் போல். அதன் காரணமாக தான் ஜூனியர் நடால் என்று ரசிகர்களால் பார்க்கப்பட்டு, பில்டப் செய்யப்பட்டு வந்தார்.

ஸ்பெயின் நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நடால் தான் எப்போதுமே ஹீரோ. முர்சியா என்ற கிராமத்தில் பிறந்த அல்காரஸ்-ன் வீட்டில், அவர் பிறப்பதற்கு முன்பாக டென்னிஸ் அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது. அந்த கிராமத்தின் முதல்முறையாக டென்னிஸ் கிளப்பில் இணைந்தவர் அல்காரஸின் தாத்தா தான். அவரின் தந்தை டென்னிஸ் விளையாட்டில் செமி - ப்ரோ வீரர். அதுமட்டுமல்லாமல் டென்னிஸ் அகாடமியையும் நடத்தி வருகிறார்.

இதனால் 3 வயதிலேயே அல்காரஸ் கைகளில் டென்னிஸ் ராக்கிட் கைகளுக்கு வந்துவிட்டது. 5 வயதிலேயே டென்னிஸ் பயிற்சியை தொடங்கியவர் அல்காரஸ். ஒரு கட்டத்தில் அல்காரஸ்-க்கு டென்னிஸ் மீது அளவுக்கடந்த காதல் வர, நல்ல வீரர் என்ற பெயர் போதவில்லை. சிறந்த வீரராக மாற விரும்பினார். பயிற்சிகளை தீவிரமாக்கினார்.

2018ஆம் ஆண்டு முன்னாள் நம்பர் 1 வீரரான ஜுவன் கார்லஸ் பெரேரோவின் அகாடமியில் இணைந்துகொண்டார். இவர் தான் நட்சத்திர வீரர் ஸ்வெரவிற்கும் பயிற்சி அளித்துள்ளார். 16 வயதில் அல்காரஸ் ஆட்டத்தை நடாலுடன் ஒப்பிட்டு பேச தொடங்கியது டென்னிஸ் உலகம். இதனை அல்காரஸும் ஒத்துக் கொண்டுள்ளார். அங்கு தொடங்கிய பயணம், 2022ஆம் ஆண்டு நடந்த மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் நடால் மற்றும் ஜோகோவிச்சை வீழ்த்தி உச்சம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரை வென்று நம்பர் 1 இடத்தை பிடித்தாலும், ஜோகோவிச் அமைதியாக கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மட்டும் ஆதிக்கத்தை செய்துகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ஜோகோவிச்சை தடுக்க யாருமே இல்லையா என்ற ரசிகர்களே புலம்ப தொடங்கினார்கள். டென்னிஸ் விளையாட்டே ஜோகோவிச்சிற்கு சொந்தமானது என்பது போல் ஆடிக் கொண்டிருந்தார்.

சரியான நேரத்தில் களம் புகுந்த அல்காரஸ், ஜோகோவிச்சின் ஆட்டத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார். யாரும் அசைக்க முடியாத ஜோகோவிச்சை தனது வேகத்தை கொண்டு அல்காரஸ் வென்று காட்டியுள்ளார். முதல் செட்டை 6-1 என்று ஜோகோவிச் கைப்பற்றிய பின், 2வது செட்டை 7-6 (8-6) என்று டை பிரேக்கர் வரை கொண்டு சென்று அல்காரஸ் வென்றது டென்னிஸ் உலகம் பார்த்திராத ஆட்டம்.

கடந்த முறை கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்ற பின், நடால் மற்றும் ஃபெடரரை எப்படி வெல்வது என மணிக்கணக்கில் சிந்தித்துள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக பெரும்பாலும் என் சிந்தனையை இருவருமே ஆக்கிரமித்து இருந்தனர். அவர்களை கடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜோகோவிச் கூறி இருந்தார். தற்போது ஜோகோவிச்சின் சிந்தனையை ஆக்கிரமிக்க 20 வயதேயான இளம் வீரர் அல்காரஸ் வந்துவிட்டார். டென்னிஸ் விளையாட்டு புதிய யுத்தத்திற்கும் தயாராகிவிட்டது.

Story first published: Monday, July 17, 2023, 8:37 [IST]
Other articles published on Jul 17, 2023
English summary
Wimbledon 2023: Who is this Spaniard Carlos Alcaraz? 20 year old player won the Wimbledon 2023 against the 23 times Grandslam Champion Novak Djokovic.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+