சபாஷ் சரியான போட்டி.. விம்பிள்டன் அரையிறுதியில் ரோஜர் பெடரர்-ஆன்டி முர்ரே மோதல்
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 10-வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரேவுடன் ரோஜர் பலப்பரிட்சை நடத்த உள்ளதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரரான பெடரர், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், பிரான்சின் கில்லஸ் சைமனை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்றார்.
அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரேவை பெடரர் எதிர்கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் உலக டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Thursday, July 9, 2015, 11:37 [IST]
Other articles published on Jul 9, 2015


Click it and Unblock the Notifications