Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 15 வயதுதான்.. 1.19 மணி நேர திக்திக் போட்டி.. வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்திய இளம் சூறாவளி!

லண்டன்: வெறும் 15 வயதே நிரம்பிய டென்னிஸ் வீராங்கனை கோரி கோகோ காஃப் நேற்று நடந்த விம்பிள்டன் போட்டியில் ஜாம்பவான் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுக்க தங்கள் ஆதர்ச நாயகர்களை புதிதாக வரும் இளம் வீரர்கள் வெற்றிபெறுவது நடந்து வருகிறது. சச்சினின் சாதனைகளை கோலி முறியடித்து வருகிறார். கால்பந்து உலகில் புது நாயகர்கள் உருவாகி வருகிறார்கள். அப்படித்தான் நேற்று டென்னிஸ் உலகம் புதிய இளம் நாயகி ஒருவரை உலகிற்கு அறிமுகம் செய்தது.

Wimbledon 2019: Cori Coco Gauff gives a shock to tennis World, Wins Venus Williams

இனி வரும் காலங்களில் 2 கே கிட்ஸ்களின் டென்னிஸ் எப்படி இருக்கும். ஆட்டம் எப்படி பொறி பறக்கும் என்று நேற்றுதான் தெரிந்தது. நேற்று தன்னுடைய 1.20 நிமிட ஆட்டம் மூலம் அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை கோரி கோகோ காஃப் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

கோரி கோகோ காஃப் வெறும் ''15 வருடம் 122 நாட்கள்'' வயது மட்டுமே கொண்ட இளம் டென்னிஸ் வீராங்கனை. விம்பிள்டன் போட்டிக்கு தேர்வான இளமையான வீராங்கனை இவர்தான். தற்போது லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டியில் இவரும் விளையாடி வருகிறார்.

நேற்றுதான் இவர் தனது முதல் போட்டியில் களமிறங்கினார். பாவம் இவருக்கு முதல் போட்டியே 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற வீனஸ் வில்லியம்சனுக்கு எதிராக போடப்பட்டு இருந்தது. ஆனால் இவர் உலகின் சிறந்த வீராங்கனையை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற எந்த பதற்றமும் இல்லாமல் தொடக்கத்தில் இருந்து இயல்பாக ஆடினார்.

முதல் செட் சரியாக 35 நிமிடங்கள் நடந்தது. அந்த 35 நிமிடம் என்பது ஜென் இசட் டென்னிஸ் எப்படி இருக்கும் என்பதை உலகிற்கு பறைசாற்றியது. எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு நொடியும் கோகோ, வீனஸுக்கு விட்டுக்கொடுக்கவே இல்லை.

அந்த 35 நிமிடங்களும் களத்தில் கோகோ ஆதிக்கம் மட்டுமே இருந்தது. ஆம் முதல் செட்டை மிக எளிதாக கோகோ வென்றார். முகத்திலோ, உடலிலோ தான் உலகின் சிறந்த வீராங்கனையை எதிர்கொள்கிறோம் என்ற பதட்டமே இல்லை. முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார் கோகோ. ஆனால் அடுத்த செட் கோகோ நினைத்தது போல இல்லை.

அடுத்த செட்டில் அனுபவம் வேலை பார்க்க தொடங்கியது. வீனஸ் விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவி அதிரடியாக அடுத்த செட்டில் தீவிரம் காட்டினார். இவர் இரண்டு பாயிண்ட் எடுக்க கோகோ மீண்டும் இரண்டு பாயிண்ட் எடுத்தார். இப்படி மாறி மாறி விளையாட இருவரும் ஒரே நேரத்தில் 4 புள்ளிகளுடன் நீண்ட நேரம் விளையாடினார்கள். இதனால் அந்த செட்டை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவியது.

ஆனால் கோகோ கொஞ்சமும் அசராமல் மீண்டும் அதிரடியாக ஆடி வரிசையாக 2 பிரேக் புள்ளிகளை பெற்று அந்த செட்டையும் கைப்பற்றினார். இந்த சுற்று சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. இதனால் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கோகோ வெற்றிபெற்றார். இதன் மூலம் விம்பிள்டன் போட்டி ஒன்றில் மிக குறைவான வயதில் முதல் போட்டியிலேயே வென்ற வீராங்கனை என்ற சிறப்பை கோகோ பெற்றுள்ளார்.

தன்னுடைய ரோல் மாடல்களில் ஒருவரையே தான் வீழ்த்துவேன் என்று நினைக்கவில்லை. களத்தில் இறங்கும் வரை நான் வெற்றிபெறுவேன் என்ற எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை என்று கோகோ குறிப்பிட்டு இருக்கிறார்... இதில் வேடிக்கையான விஷயம் கோகோ பிறக்கும் முன்பே 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் வீனஸ் வில்லியம்ஸ்... அவரையே நேற்று வந்த கோகோ வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

Story first published: Tuesday, July 2, 2019, 10:44 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+