ரோஜர் பெடரர் vs ரபேல் நடால்.. பரபரக்கும் விம்பிள்டன் செமி பைனல்.. எகிறும் எதிர்பார்ப்பு!
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரோஜர் பெடரர் - ரபேல் நடால் மோதல் நடைபெற உள்ளது.
ஜூலை 12 அன்று இரவு 8 மணிக்கு மேல் விம்பிள்டன் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் - ரபேல் நடால் இந்தப் போட்டியில் மோத உள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு அதுவரை டென்னிஸ் உலகில் கோலோச்சி வந்த பெடரரை விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வீழ்த்தி மகுடம் சூடினார் நடால். அப்போது முதல் நடால் உலகின் முன்னணி டென்னிஸ் வீரராக வலம் வருகிறார். பல முறை இவர்கள் இருவரும் மாறி, மாறி தரவரிசையில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
டென்னிஸ் வீரர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று ரோஜர் பெடரர் ரசிகர்கள். மற்றொன்று, ரபேல் நடால் ரசிகர்கள். அந்தளவுக்கு டென்னிஸ் உலகில் இவர்கள் இருவரின் தாக்கம் இன்றளவும் உள்ளது.
2019 விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றுக்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய ரோஜர் பெடரர் - ரபேல் நடால் நான்காவது முறையாக விம்பிள்டனில் மோத இருக்கிறார்கள்.
இது இவர்கள் இருவரும் சந்திக்கும் 40வது போட்டியாகும். விம்பிள்டனில் இவர்கள் சந்திக்கும் நான்காவது போட்டி. பெடரர் தன் 9வது விம்பிள்டன் பட்டத்தையும், நடால் தன் மூன்றாவது விம்பிள்டன் பட்டத்தையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரெஞ்சு ஓபன் தொடரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பெடரர், நடாலிடம் நேர் செட்களில் தோல்வி அடைந்து இருந்தார். அதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்று நடாலை வீழ்த்துவரா ரோஜர் பெடரர்?


Click it and Unblock the Notifications