Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்... இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.. அசத்தல் சாதனை!

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறி ஸ்பெயினின் ஜோகோவிச் அசத்தியுள்ளார்.

உலக புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னின்ஸ் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

விம்பிள்டன்

விம்பிள்டன்

இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 7-5, 7-5 என்ற கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

செர்பியாவை சேர்ந்த வீரரான ஜோகோவிச் நுழையும் 30வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இதுவாகும். இதுவரை 19 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச், இந்த முறையும் வெற்றி பெற்று 20வது முறையாக மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது அரையிறுதி

2வது அரையிறுதி

நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, போலந்தின் ஹூபர்ட் ஹர்காசை ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹூபர்ட், 6-3, 6-0, 6-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Recommended Video

Serena Williams கண்ணீருடன் வெளியேறினார்! என்ன நடந்தது ? | Oneindia Tamil
4 முறை சாம்பியன்

4 முறை சாம்பியன்

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதுகின்றனர். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய, பிரெஞ்ச் ஓபன் தொடர் என ஏற்கனவே பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், தற்போது விம்பிள்டன் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். அடுத்து வரும் யுஎஸ் ஓபன் தொடரிலும் பட்டம் வென்றுவிட்டால் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Saturday, July 10, 2021, 13:28 [IST]
Other articles published on Jul 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+