Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் 2023-டென்னிஸ் அரசன் ரோஜர் பெடரருக்கு உற்சாக வரவேற்பு..முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி

லண்டன் : டென்னிஸ் உலகின் பாரம்பரியமிக்க விம்பிள்டன் தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கியது. இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் இரண்டு முறை சாம்பியன் ஆன பிரிட்டன் ஆண்டி முர்ரேவும், சக வீரரான ரயான் பெனிஸ்டலும் மோதினர். இந்த போட்டியை நேரில் காண எட்டு முறை விம்பிள்டன் சாம்பியனான ரோஜர் ஃபெடரர் வந்தார்.

 Wimbledon 2023 - Andy Murray wins first round as crowd welcomes roger federer

டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முதல் முறையாக விம்பிள்டனுக்கு சிறப்பு விருந்தினராக ரோஜர் பெடரர் வந்தார். பெடரரை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்து வரவேற்றனர். இந்த நிலையில் போட்டி தொடங்கியதில் இருந்து ஆண்டி முர்ரே அதிரடியாக விளையாடி புள்ளிகளை பெற்றார். 36 வயதான ஆண்டி முர்ரே 6க்கு 3, 6 க்கு பூஜ்ஜியம் , 6 க்கு ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்றில் ஆண்டி முர்ரே ஐந்தாவது நிலை வீரரான ஸ்டஃப்னோ ஷிட்சிபாஸ் அல்லது 2020 யுஎஸ் ஓபன் சாம்பியன் ஆன டோமினிக் தீமை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய பல போட்டிகள் மழையால் தடைபட்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சில போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டன.இதனிடையே இந்த தொடரின் முதல் நிலை வீரராக களமிறங்கி உள்ள ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கார்ஃபியா,பிரான்ஸ் நாட்டின் சார்டியை எதிர்கொண்டார். இதில் 6க்கு பூஜ்ஜியம், 6க்கு இரண்டு 6க்கு ஐந்து என்ற செட் கணக்கில் ஆல் கார்ஸ் கார்பியா வெற்றி பெற்றார்.

Story first published: Wednesday, July 5, 2023, 0:05 [IST]
Other articles published on Jul 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+