Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன்: அனிசிமோவா வரலாற்று வெற்றி.. விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக்குடன் மோதல்!

லண்டன்: 2025 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 11வது நாளான நேற்று, பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் லண்டனில் உள்ள ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் மற்றும் குரோக்கெட் கிளப்பில் நடைபெற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், டாப் சீடருமான அரினா சபலென்காவை அமெரிக்காவின் 13வது சீட் வீராங்கனை அமண்டா அனிசிமோவா 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

2019 பிரெஞ்சு ஓபனில் 17 வயதில் அரையிறுதிக்கு முன்னேறிய அனிசிமோவா அப்போது இறுதிப் போட்டி வாய்ப்பை தவற விட்டு இருந்தார். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய அவர் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். தனது தந்தையின் எதிர்பாராத மரணம், பல காயங்கள் மற்றும் மன உளைச்சல் போன்ற தனிப்பட்ட சோகங்களைச் சந்தித்த அனிசிமோவாவுக்கு இந்த வெற்றி ஒரு மகத்தான மைல்கல்லாக அமைந்தது.

Wimbledon Amanda Anisimova Iga Swiatek Novak Djokovic

இரண்டாவது அரையிறுதியில், போலந்தின் 8வது சீடரான இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி ஜூலை 12, சனிக்கிழமை அன்று நடைபெறும். அதில் அமண்டா அனிசிமோவா - இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்.

நேற்று நடந்த 2025 விம்பிள்டன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில், நெதர்லாந்தின் செம் வெர்பீக் மற்றும் செக் குடியரசின் கேடரினா சினியாகோவா ஜோடி, பிரிட்டன்-பிரேசில் ஜோடியான ஜோ சாலிஸ்பரி மற்றும் லூயிசா ஸ்டெஃபானியை 7-6(3), 7-6(3) என்ற செட் கணக்கில் வென்று கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றனர்.

ஆண்கள் அரையிறுதிப் போட்டி வரிசை

இன்று (ஜூலை 11, வெள்ளி), ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் அரையிறுதியில், இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் 5வது சீடரான டெய்லர் ஃப்ரிட்ஸ் உடன் மோதுகிறார். இருவரும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர், இரண்டிலும் அல்காரஸ் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது அரையிறுதியில், செர்பியாவின் 6வது சீடரும், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், டாப் சீடரான இத்தாலியின் ஜானிக் சின்னர்ரை எதிர்கொள்கிறார். ஜோகோவிச் தனது 8வது விம்பிள்டன் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லும் முனைப்பில் உள்ளார்.

சின்னர், ஜோகோவிச்சை தங்களின் கடந்த நான்கு சந்திப்புகளிலும் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 9 சந்திப்புகளில் 5-4 என சின்னர் முன்னிலையில் உள்ளார். ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?

இந்தியாவில், விம்பிள்டன் 2025 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையாகக் காணலாம். மேலும், ஜியோசினிமா செயலி / இணையதளத்திலும் போட்டிகளை நேரலையில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

Story first published: Friday, July 11, 2025, 7:46 [IST]
Other articles published on Jul 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+