Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் 2025: காலிறுதிக்கு தகுதி பெற்ற ஜோகோவிச்.. மைதானத்திற்கு வந்த விராட் கோலிக்கு அவமானம்

லண்டன்: விம்பிள்டன் 2025 ஆம் ஆண்டு டென்னிஸ் தொடரின் கால இறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றிருக்கிறார். 7 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள ஜோகோவிச் எட்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்த தொடரில் களம் இறங்குகிறார்.

38 வயதான ஜோகோவிச், இளம் வீரர்களுக்கு சவால் அளிப்பாரா? 25 வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சூழலில் எப்போதுமே ஒரு செட்டை கூட இழக்காமல் விளையாடும் ஜோகோவிச் இன்றைய ஆட்டத்தில் தடுமாறினார்.

Wimbledon 2025

நான்காவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் 11வது நிலை வீரரான டி மியானருடன் ஜோகோவிச் பலப்பரிட்சை நடத்தினார். முதல் செட்டை ஜோகோவிச் ஒன்றுக்கு ஆறு என்ற கணக்கில் மோசமாக இழந்தார். இதை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6க்கு 4 6க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச் அபாரமாக விளையாடினார்.

இந்த சூழலில் ஜோகோவிச் நான்காவது செட்டில் 4 க்கு ஒன்று என்ற கணக்கில் பின்தங்கி மோசமான நிலையில் இருந்தார். எனினும் தன்னுடைய அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று ஆறுக்கு நான்கு என்ற கணக்கில் வென்று சாதித்தது. இதன் மூலம் 11வது முறையாக விம்பிள்டன் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்று இருக்கிறார்.

இந்த போட்டியில் பிரபல டென்னிஸ் ஜாம்பவான் பெடரர் காணவந்தார். பெடரரை பலமுறை தொலைக்காட்சி கேமராவில் காண்பித்தார்கள். ஆனால் இந்த போட்டியை நேரில் பார்த்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை தொலைக்காட்சி கேமராவில் காட்டவே இல்லை.

மேலும் போட்டி முடிந்தவுடன் ஜோகோவிச் பெடரர் குறித்து பேசினார். பெடரர் இந்த போட்டியை காண வந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க, "பெடரர் என் நான் விளையாடுவதை இப்போதுதான் முதன் முதலில் நேரில் பார்க்கிறார் என்று நினைக்கின்றேன். அவர் பார்த்த போட்டியில் நான் வென்று விட்டேன்."

"இதேபோன்று ரோஜர் பெடரர், உண்மையான சாம்பியன் அவரைப் பார்த்து நான் அசந்து இருக்கிறேன். அவர் மீது அதிக மரியாதை வைத்திருக்கின்றேன். இது போன்ற ஒரு தொடரில் அவர் மீண்டும் வந்து பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது" என்று ஜோகோவிச் கூறினார். எனினும் இந்த போட்டியை பார்த்த கோலியை தொலைக்காட்சியில் காட்டாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்.

Story first published: Monday, July 7, 2025, 23:56 [IST]
Other articles published on Jul 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+