Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் முதல் சுற்றில் ரத்தம் சொட்ட போராடிய சின்னர்: மிரட்டலான வெற்றிக்கு பின்னால் நடந்தது என்ன?

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நடப்பு சாம்பியனும், உலகின் முதன்மை நிலை வீரருமான ஜானிக் சின்னர் (Jannik Sinner), தனது முதல் சுற்றில் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சை (Miomir Kecmanovic) போராடி வீழ்த்தும் நிலை ஏற்பட்டது. சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த விறுவிறுப்பான போட்டியில், சின்னர் 4-6, 6-3, 6-7 (6-8), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி வெற்றியைப் பதிவு செய்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் அதிர்ச்சிகரமான தோல்வியைத் தழுவிய சின்னர், விம்பிள்டன் தொடருக்கு முன்பாக புல்வெளித் தொடர்கள் எதிலும் பங்கேற்கவில்லை. இதனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் பல தவறுகளைச் செய்த சின்னர், முதல் செட்டை எளிதில் பறிகொடுத்தார்.அதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டை வென்று மீண்டு வந்த சின்னர், மூன்றாவது செட்டின் போது ஆடுகளத்தில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

Jannik Sinner battles through injury during Wimbledon match

மேலும், அவரது காலில் ஏற்பட்ட நகப் பிரச்சனை காரணமாக விளையாடும்போதே காலணியில் இருந்து இரத்தம் கசிந்தது. இருப்பினும், தனது அபாரமான மன உறுதியால் ஆட்டத்திற்குத் திரும்பிய சின்னர், நான்காவது மற்றும் ஐந்தாவது செட்களைத் தன்வசப்படுத்தி போட்டியை வென்றார். இப்போட்டியில் 31 ஏஸ் (ace) மற்றும் 72 வின்னர்களை (winners) விளாசிய சின்னர், தனது அடுத்த சுற்றில் போர்ச்சுகல் நாட்டின் நுனோ போர்ஜஸை (Nuno Borges) எதிர்கொள்ள உள்ளார்.

விம்பிள்டன் 2026: செரீனா வில்லியம்ஸின் வரலாற்று கம்பேக்.. முதல் சுற்றில் யாருடன் மோதல்?

விம்பிள்டன் 2026: செரீனா வில்லியம்ஸின் வரலாற்று கம்பேக்.. முதல் சுற்றில் யாருடன் மோதல்?

பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய போலந்தின் முன்னணி வீராங்கனை மாயா சவாலின்ஸ்கா (Maja Chwalinska), விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். தாய்லாந்தின் மனஞ்சயா சவங்காவிடம் (Mananchaya Sawangkaew) 2-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் அவர் தோல்வியைத் தழுவினார்.

இப்போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவாலின்ஸ்கா முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டில் வெற்றிக்கான மேட்ச் பாயிண்டைப் பெற முயன்றபோது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

விம்பிள்டன் டென்னிஸ் 2026: முதல் நாளிலே களமிறங்கும் சின்னர்.. எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்?

விம்பிள்டன் டென்னிஸ் 2026: முதல் நாளிலே களமிறங்கும் சின்னர்.. எந்த சேனல், ஒடிடியில் பார்க்கலாம்?

காயம் மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், விம்பிள்டன் போன்ற பெரிய தொடரில் இருந்து பாதியிலேயே விலக சவாலின்ஸ்கா விரும்பவில்லை. இருப்பினும், காயம் காரணமாக அவரது ஆட்டத் திறன் குறைந்ததைப் பயன்படுத்திக் கொண்ட சவங்காவ், அடுத்தடுத்த செட்களை வென்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

Story first published: Tuesday, June 30, 2026, 9:13 [IST]
Other articles published on Jun 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+