Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி சின்னர் அபார வெற்றி.. விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஸ்வெரவ்வுடன் மோதல்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிப் போட்டியில், உலகின் முன்னணி வீரரான ஜானிக் சின்னர், செர்பியாவின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் பிரிட்டன் வீரரை வீழ்த்திய அலெக்சாண்டர் ஸ்வெரவ், இறுதிப்போட்டியில் சின்னர் உடன் மோத உள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னர், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். சுமார் 2 மணி 20 நிமிடங்களில் இந்த போட்டி நிறைவடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்விக்கு சின்னர் பழிதீர்த்துக் கொண்டார்.

Wimbledon 2026 Jannik Sinner Defeats Novak Djokovic to Reach Final To Face Alexander Zverev

ஜோகோவிச் தனது கடைசி ஆறு கிராண்ட்ஸ்லாம் அரை இறுதிப் போட்டிகளில் ஐந்தாவது தோல்வியை சந்தித்து இருக்கிறார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில், பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், பிரிட்டனின் வைல்ட்கார்டு வீரர் ஆர்தர் ஃபெரியை எதிர்கொண்டார்.

கால்பந்து உலகக்கோப்பை.. 88வது நிமிட கோல்.. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

கால்பந்து உலகக்கோப்பை.. 88வது நிமிட கோல்.. பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்

இதில் ஆரம்பத்தில் ஃபெரி கடுமையான சவாலை அளித்தாலும், அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரவ் 7-6, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று முதன்முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 13வது வீரர் என்ற பெருமையை ஸ்வெரவ் பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரவ் ஆகியோர் மோத உள்ளனர்.

Story first published: Saturday, July 11, 2026, 7:20 [IST]
Other articles published on Jul 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+