ஜோகோவிச் மாபெரும் விம்பிள்டன் ரெக்கார்டு.. R16 சுற்றுக்கு சின்னர் தகுதி.. சபலென்காவும் வெற்றி
நியூயார்க்: 2026 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 5-வது நாளில் (ஜூலை 3) நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டங்களில் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 7 முறை விம்பிள்டன் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெச்சை 7-5, 6-4, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். இந்த வரலாற்று வெற்றியின் மூலம் விம்பிள்டன் வரலாற்றில் தனது 105-வது வெற்றியைப் பதிவு செய்த ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.

மற்றொரு போட்டியில், நடப்பு சாம்பியனும் உலகின் முதன்மை வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கனடாவின் ஃபீலிக்ஸ் ஆகர்-அலியாசிம், அமெரிக்காவின் மைக்கேல் ஜெங்கை 7-6, 6-2, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் பரபரப்பான ஆட்டத்தில், முதன்மை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார். அடுத்த சுற்றில் அவர் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார். ஒசாகா தனது 3-வது சுற்று ஆட்டத்தில் டாரியா கசாட்கினாவை 6-1, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
மற்றொரு மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காஃப், சக நாட்டைச் சேர்ந்த கிளேர் லியூவை 2 மணி 25 நிமிடங்கள் போராடி 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை எதிர்கொள்கிறார்.


Click it and Unblock the Notifications
