Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் முறையாக விம்பிள்டன் இரட்டையர் பட்டத்தை சுவைத்த சானியா.. ஹிங்கிஸுடன் சேர்ந்து அசத்தல்

லண்டன்: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார் இந்தியாவின் சானியா மிர்ஸா. சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து இந்த சந்தோஷத்தை அவர் இந்தியர்களுக்குக் கொடுத்துள்ளார்.

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை சானியா வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். மேலும் முதல் முறையாக அவர் மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இப்போதுதான் வென்றுள்ளார்.

இதற்கு முன்பு அவர் கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராடி வெற்றி

போராடி வெற்றி

மிகக் கடுமையான போட்டியாக அமைந்தது இந்த ஆட்டம். ரஷ்யாவின் எகதரீனா மகரோவா - எலீனா வெஸ்னினா ஜோடியை கடுமையாக போராடித்தான் சானியா ஜோடி வென்றது.

போட்டா போட்டி

போட்டா போட்டி

முதல் செட்டை ரஷ்ய ஜோடி 5-7 என்ற கணக்கில் வெல்ல, அடுத்த செட் டை பிரேக்கருக்குப் போனது. இறுதியில் அதை 7-6 (4) என்ற கணக்கில் சானியா ஜோடி வென்றது. தொடர்ந்து மூன்றாவது செட்டியைும் போராடி 7-5 என்ற கணக்கில் சானியா ஜோடி வென்று சாம்பின் ஆனது.

மூடிய அரங்கில் போட்டி

மூடிய அரங்கில் போட்டி

நேற்று போட்டி நடந்து கொண்டிருந்தபோது, 3வது செட்டின்போது 5-5 என்ற நிலையில் ஆட்டம் இருந்தபோது இருள் சூழ்ந்ததால், மேற்கூரை மீடப்பட்டு விளக்கொளியில் போட்டி தொடர்ந்தது.

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த சானியா

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த சானியா

இந்தியாவிலிருந்து இதுவரை எந்த வீராங்கனையும் மகளிர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதில்லை. அந்த வகையில் சானியா செய்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

3 முறை கலப்பு இரட்டையர்

3 முறை கலப்பு இரட்டையர்

இதற்கு முன்பு மூன்று கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் சானியா. முதல் முறையாக இப்போதுதான் மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் பெற்று அசத்தியுள்ளார்.

எந்தெந்த பட்டம்

எந்தெந்த பட்டம்

இதற்கு முன்பு 2009ல் ஆஸ்திரேலிய ஓபன், 2012ல் பிரெஞ்சு ஓபன் ஆகிய கலப்பு இரட்டையர் பட்டங்களை மகேஷ் பூபதியுடன் இணைந்து பெற்றார் சானியா. கடந்த ஆண்டு ப்ரூனோ சோரஸுடன் இணைந்து அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை அவர் வென்றார்.

ஹிங்கிஸுக்கு 3வது விம்பிள்டன்

ஹிங்கிஸுக்கு 3வது விம்பிள்டன்

ஹிங்கிஸுக்கு இது 3வது விம்பிள்டன் இரட்டையர் பட்டமாகும். இதற்கு முன்பு 1996ல் ஹெலன சுகோவா மற்றும் 1998ல் ஜானா நவோத்னா ஆகியோருடன் இணைந்து பட்டம் வென்றுள்ளார் ஹிங்கிஸ்.

Story first published: Sunday, July 12, 2015, 10:13 [IST]
Other articles published on Jul 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+