விம்பிள்டன் டென்னிஸ் - தோனிக்கு உற்சாக வரவேற்பு.. காயப்பட்ட சிங்கம் நடால் மீண்டு போராட்டம்
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.
Recommended Video
லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நடால், 11வது நிலை வீரரான அமெரிக்காவின் டைலர் பிரிட்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
தொடக்கத்தில் நடால் அதிரடியாக விளையாடி புள்ளிகளை குவித்தார். அவருக்கு அமெரிக்க வீரர் டைலர் கடும் நெருக்கடி அளித்தார்.

வயிற்று வலி
முதல் செட் 3க்கு3 என்ற கணக்கில் சமனில் இருந்த நிலையில், டைலர்பதிலடி கொடுத்து அடுத்தடுத்து பாயிண்டகளை பெற்று 6க்கு3 என்ற கணக்கில கைப்பற்றினார். அப்போது நடாலுக்கு வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டது. இதனையடுத்து வலியால் துடித்த அவர், சிறிது நேரம் பிரேக் எடுத்து கொண்டு மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார்.

அமெரிக்க வீரர் பதிலடி
இதனையடுத்து, மீண்டும் களத்துக்கு திரும்பிய நடால் 2வது செட்டில் 7க்கு5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் பின்னர் மூன்றாவது செட்டில் சுதாரித்து கொண்டு விளையாடிய டைலர், நடாலுக்கே டஃப் கொடுத்து செட் புள்ளிகளை அடுத்தடுத்து பெற மூன்றாவது செட்டை அமெரிக்க வீரர் 6க்கு3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

போராளி நடால்
இதனை தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட நடால், அதனை பொருட்படுத்தாமல் தாம் ஒரு போராளி என்பதை மீண்டும் ரசிகர்களுக்கு உணர்த்தினார். 4வது செட்டை 7க்கு5 என்ற கணக்கில் நடால் கைப்பற்ற, வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவரும் 6 க்கு 6 என்ற செட்களை கைப்பற்ற, டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் நடால் வெற்றி பெற்றார்.

மைதானத்தில் தோனி
சுமார் 4 மணி நேரம் 21 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் 3க்கு6, 7க்கு5,3க்கு6,7க்கு5,7க்கு6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பேக்காம் ஆகியோர் நேரில் கண்டு களித்தனர். ரசிகர்களின் ஆதரவால் தான் இந்தப் போட்டியை தம்மால் முடிக்க முடிந்ததாக நடால் கூறினார்.


Click it and Unblock the Notifications