விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டம்-பயஸ் ஜோடி வென்றது
விம்பிள்டன்: விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி அபார வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.
பயஸ் வெல்லும் 12வது விம்பிள்டன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதனையாகும்.
இந்திய-ஜிம்பாப்வே ஜோடி, தென் ஆப்பிரிக்காவின் வெஸ்லி மூடி, அமெரிக்காவின் லிசாரேமன்ட் ஜோடியை 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
பயஸ், பிளாக் ஜோடி கடந்த ஆண்டு இப்பிரிவில் 2வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு விட்டதை இந்த முறை பிடித்து விட்டனர்.
இருவரும் இணைந்து இதற்கு முன்பு 2008ல் அமெரிக்க ஓபன் பட்டம், இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களையும் வென்றுள்ளனர் என்பது குரிப்பிடத்தக்கது.
பயஸுக்கு இது 12வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கலப்பு இரட்டையர் பிரிவில் 6வது பட்டமாகும். இந்த வெற்றியின் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை (11) வென்ற இந்தியர் என்ற பெருமையை வைத்துள்ள மகேஷ் பூபதியின் சாதனையை முறியடித்துள்ளார் பயஸ்.


Click it and Unblock the Notifications