Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பர் 1 ஆன கையோடு முதல் தோல்வியைச் சந்தித்த சானியா!!

ஸ்டட்கர்ட்: உலக மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த பின்னர் ஆடிய முதல் போட்டியிலேயே சானியா மிர்ஸா தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார்.

ஸ்டட்கர்ட்டில் தொடங்கியுள்ள போர்ஸ் டென்னிஸ் கிரான்ட்ப்ரீ தொடரில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது.

World No. 1 Sania Mirza loses in first round of Stuttgart event

முதுகு வலி காரணாக ஹிங்கிஸால் இப்போட்டியில் சரியாக ஆட முடியவில்லை. அவரது வழக்கமான திறமையை இந்தப் போட்டியில் காண முடியவில்லை. இதன் காரணமாக சானியா - ஹிங்கிஸ் ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக் - ஸ்டெபானி வோக்ட் ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.

சானியா மிர்ஸாவும், ஹிங்கிஸும் இணைந்து ஆட ஆரம்பித்த பின்னர் தோல்வியையே சந்திக்காமல் வென்று வந்தனர். ஆனால் தற்போது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

இரு வீராங்கனைகளும் இணைந்து மொத்தம் 14 வெற்றிகளைச் சந்தித்துள்ளனர். மேலும் இந்தியன்வெல்ஸ், மியாமி, சார்ல்ஸ்டன் ஆகிய 3 பட்டங்களையும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 24, 2015, 9:23 [IST]
Other articles published on Apr 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+