Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன்-செரினாவுக்கு 2, வீனசுக்கு 1 பட்டம்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தனது அக்கா வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி கோப்பை வென்றார்.

பெண்கள் இரட்டையரில் அக்காவும், தங்கையும் ஜோடி சேர்ந்து பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றயைரில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை எதிர்கொண்டார்.

தனது புயல்வேக சர்வீஸ்களால் வீனஸை மிரட்டிய செரினா 7-6, 6-2 என நேர் செட்களில் வென்று கோப்பை வென்றார்.

இது செரினா கைப்பற்றும் மூன்றாவது விம்பிள்டன் (2002, 2003, 2009) மற்றும் 11வது கிராண்ட்ஸ்லாம் (4 ஆஸ்திரேலியன் ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 3 விம்பிள்டன், 3 யுஎஸ் ஓபன்) பட்டமாகும்.

மேலும் இதுவரை வீனசுடன் மோதிய 8 கிராண்ட்ஸ்லாம் பைனல்களில் ஆறில் செரினா வென்று, வீனஸ் மீதான தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறார்.

அடுத்து நடந்த பெண்கள் இரட்டையர் பைனலில் செரினா, வீனஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், ரென்னே ஸ்டப்ஸ் ஜோடியை சந்தித்தது. இதில் சூப்பராக விளையாடி செரினா-வீனஸ் 7-6, 6-4 என வென்று பட்டம் வென்றனர்.

இதன்மூலம் இந்த ஆண்டு விம்பிள்டனில் செரினாவுக்கு 2, வீனசுக்கு 1 பட்டம் கிடைத்துள்ளது. மேலும் பெண்கள் இரட்டையரில் இந்த சகோதரிகள் இணைந்து கைப்பற்றும் 9வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+