Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெள்ளி வென்றாலும் தரவரிசையில் சாய்னாவுக்கு அடுத்த இடத்திலேயே நீடிக்கும் பி.வி.சிந்து!

டெல்லி: சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சாய்னா நேஹ்வால் 9வது இடத்திற்குச் சரிந்து விட்டார். அதேசமயம், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து 10வது இடத்திலேயே தொடர்ந்து நீடிக்கிறார்.

முதல் இடத்தைப் பிடிப்பதே தனது நோக்கம் என்று சமீபத்தில்தான் கூறியிருந்தார். ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கம் அவருக்கு உயர்வைத் தரவில்லை. மாறாக தொடர்ந்து அதே இடத்திலேயே அவர் நீடிக்கிறார்.

Badminton World Rankings: Saina Nehwal drops to 9th spot, PV Sindhu remains at 10th

இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 26வது இடத்திற்குத் தள்ளபப்ட்டுள்ளது. அவர்கள் ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியவர்கள் ஆவர்.

ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஜய் ஜெயராம் 22வது இடத்திற்குப் போயுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாய்னாவும் ஏமாற்றினார். அவர் சரியாக விளையாடாமல் போனததால் 4 புள்ளிகள் குறைந்து 9வது இடத்திற்கு இறங்கி வந்து விட்டார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான ஜப்பானின் நஸோமி ஒகுகரா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சீனாவின் ஷியான் வாங் 6வது இடத்தைப் பிடித்து்ளார்.

காலிறுதிப் போட்டியில் சிந்துவிடம் தோல்வியுற்ற சீனாவின் யிஹான் வாங் 4வது இடத்திற்கு இறங்கியுள்ளஆர். தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனன் 5வது இடத்தில் இறுக்கிறார்.

Story first published: Thursday, August 25, 2016, 16:49 [IST]
Other articles published on Aug 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+