Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெள்ளி மங்கை சிந்துவிற்கு பாலிவுட், கோலிவுட் நடிகர்களின் வாழ்த்து மழை

சென்னை: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஸ்பெயினின் மரினிடம் போராடி தோற்றதால் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் மட்டுமே கிடைத்தது. அவருக்கு பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பேட்மிண்டன் இறுதியிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினுடன் மோதினார். இதில் கரோலினா வெற்றி வாகை சூடி தங்கப்பதக்கம் வென்றார்.

Bollywood celebrities can’t stop gushing over PV Sindhu’s achievement

சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த பிவி சிந்துவை பாலிவுட் வட்டாரங்கள் பாராட்டி வருகின்றனர்.

Bollywood celebrities can’t stop gushing over PV Sindhu’s achievement

அமிதாப் பச்சன்

இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ஸ்ரீ தேவி

வாழ்த்துக்கள் சிந்து, நீ சாதித்து விட்டாய் சிந்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பிவி சிந்து.

ஏ.ஆர் ரகுமான்

வாழ்த்துக்கள் சிந்து... என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தூதுவர் ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார்.

பூஜா ஹெக்டே

உலக சாம்பியனுக்கு எதிராக போராடிய நீங்கள் தான் எங்களுடைய சாம்பியன் என்று பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான டுவிட்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிந்துவை வாழ்த்தி பதிவிட்ட டுவிட்டரை 14 ஆயிரம் பேர் ரிடுவீட் செய்து வாழ்த்தியுள்ளனர்.

Story first published: Saturday, August 20, 2016, 10:51 [IST]
Other articles published on Aug 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+