இங்கிலாந்து ஓபன் இறகுப்பந்து.. முதல்முறை சாம்பியன்.. ஜப்பான் வீரர் கெண்டோ புதிய சாதனை
பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து ஓபன் இறகுப்பந்து தொடரின் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை ஜப்பானின் கெண்டொ மொமொட்டா வென்று சாதனை படைத்தார்.
ஆல் இங்கிலாந்து இறகுப்பந்து தொடர் இங்கிலாந்து பர்மிங்ஹாமில் நடைபெற்றது. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், ஜப்பானின் கெண்டொ மொமொடா, டென்மார்க்கின் விக்டரை எதிர்த்து ஆடினார்.

முதல் சுற்றை 21-11 என்ற செட் கணக்கில் கெண்டொ கைப்பற்றினார். இதையடுத்து 2வது சுற்றில் அனல் பறந்தது. ஆனால்.. 2வது செட்டை 15-21 என டென்மார்க்கின் விக்டர் அபாரமாக தன்வசப்படுத்தினார்.
வெற்றி யாருக்கும் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அனல் பறந்தது. இருவரும் சளைக்காமல் ஆடியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் அந்த செட்டை 21-15 என்ற புள்ளி கணக்கில் கெண்டொ கைப்பற்றினார்.
21-11, 15-21, 21-15 என டென்மார்க்கின் விக்டரை அவர் வீழ்த்தினார். இதன் மூலம் ஆல் இங்கிலாந்து இறகுப்பந்து தொடரை வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையை பெற்று சாதனை படைத்தார்.


Click it and Unblock the Notifications