For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 36 நிமிடங்கள்..! தங்க வேட்டை நாயகி பி.வி. சிந்துவின் திக், திக் தருணங்கள்..! பரபர காட்சிகள்

Recommended Video

P.V. Sindhu on winning World Badminton Championships gold

பேசல்: வெறும் 36 நிமிடங்களில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தங்க பதக்கத்தை அள்ளிச் சென்றிருக்கிறார் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி. சிந்து.

சுவிட்சர்லாந்தில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டி நடைபெற்றது. அதில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை இந்திய இளம் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்தார்.

பல தருணங்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சிந்து மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை அவர் வீணடிக்கவில்லை. இறுதிப் போட்டிக்கே உரிய அசாத்திய வேகத்துடன் ஆட்டத்தில் வலம் வந்தார்.

முதல் செட் வசமானது

முதல் செட் வசமானது

இந்திய மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் முதல் செட்டை அவர் எளிதாக அள்ளினார். ஸ்கோர் 21க்கு 7. பல தருணங்களில் தமது ஆக்ரோஷ மற்றும் நிதான ஆட்டத்தில் எதிராளியான ஒகுஹாராவை தண்ணீர் குடிக்க வைத்தார். முதல் செட்டில் சிந்துவின் பக்கம் புள்ளிகள் உயர்ந்து கொண்டே வந்தன. நினைத்த படியே முதல் செட்டை தனதாக்கி, ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்தார் பி.வி. சிந்து.

2வது செட்டும் தனதானது

2வது செட்டும் தனதானது

2வது செட். ரசிகர்கள் உச்சக்கட்ட டென்ஷனில் இருந்தனர். தமது முழு பலத்தையும், திறமையையும் பிரயோகப்படுத்தி பேட்மின்டன் மட்டையை பிடித்திருந்த கைகளை லாவகமாக சுழற்றினார் சிந்து. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க தொடங்கின. அந்த செட்டும் தம் வசமானது. ஸ்கோர் 21க்கு 7.

முதல் இந்தியர்

முதல் இந்தியர்

முதல் செட்டை போன்றே 21க்கு 7. தங்க வேட்டை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. 21க்கு 7, 21க்கு 7 என்ற நேர்செட்டுகளில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் தங்க பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திரத்தை படைத்தார்.

தொடரின் வரலாறு

தொடரின் வரலாறு

1977ல் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடத்தப்பட்டது. அப்போது முதல் கடந்த 1983 வரை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தான் இத்தொடர் நடந்தது. அதன் பின்னர், 1985 முதல் 2005 வரை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இத்தொடர் நடைபெற்றது. 2006ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

42 ஆண்டுகளில் முதல் முறை

42 ஆண்டுகளில் முதல் முறை

இந்த 42 ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார் பி. வி. சிந்து. தங்க மங்கையான சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Story first published: Monday, August 26, 2019, 9:18 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
P.v.sindhu won world badminton championship within 36 minutes.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+