சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை... இந்திய வீராங்கனை சாய்னா தொடர்ந்து முதலிடம்
டெல்லி : சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சங்கம் நேற்று வெளியிட்டது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 13-வது இடத்தில் உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 5-வது இடத்தையும், காஷ்யப் 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தென் கொரியா ஓபன் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய வீரர் அஜய் ஜெயராம் 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 25-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீரர் பிரனாய் ஒரு இடம் பின்தங்கி 16-வது இடத்தை பிடித்துள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 11-வது இடத்தில் தொடருகிறது.


Click it and Unblock the Notifications