Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டு: குத்துச் சண்டையில் தங்கம் வென்றார் மேரி கோம்!

இன்சியான்: ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

51 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன.

Superwoman Mary Kom Wins Historic Asian Games Gold

மேரிகோம்

51 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை ஷெகரேபேகோவாவை சந்தித்தார் மேரி கோம். இதில் சிறப்பாக செயல்பட்ட மேரிகோம் 2-0 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

வரலாற்றுச் சாதனை

இதன் மூலம் ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். கடந்த முறை (2010, குவாங்சு) இப்போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.

மல்யுத்தம் இந்தியா பின்னடைவு

ஆண்கள் 'கிரோக்கோ-ரோமன்' பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தர்மேந்திர் 0-4 என ஈரானின் தார்சி பஷிரியிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் துளசி சந்தீப் 0-4 என தஜிகிஸ்தானின் ஓப்லோபெர்டிவிடம் வீழ்ந்தார்.

இந்திய வீரர்

காலிறுதியில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 1-3 என ஈரானின் போயெரி பயானியிடம் தோல்வியை தழுவினார். காலிறுதியில் இந்திய வீரர் மனோஜ் குமார் 0-3 என சீனாவின் பெங்கிடம் வீழ்ந்தார்.

தரவரிசை பட்டியல்

7 தங்கம், 8 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் தரவரிசையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, October 1, 2014, 13:08 [IST]
Other articles published on Oct 1, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+