Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-அயர்லாந்து இடையேயான நாளைய போட்டி பற்றிய 10 சுவாரஸ்யங்கள்

ஹாமில்டன்: நாளை ஹாமில்டன் நகரில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டோணி தலைமையிலான இந்திய அணி நாளை அயர்லாந்துடன் மோதுகிறது. உலகக் கோப்பை போட்டிகளில் 4 போட்டிகளில் விளையாடிய அயர்லாந்து 3ல் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடக்கும் இந்த போட்டி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ,

2வது போட்டி

2வது போட்டி

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதுவது இது இரண்டாவது முறை ஆகும்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா அயர்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெற்றி

வெற்றி

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியாவும், அயர்லாந்தும் இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டு முறையும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதல்முறையாக 2007ம் ஆண்டு பெல்ஜியத்தில் அயர்லாந்து, இந்தியா மோதியது. அந்த போட்டியில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டோணி

டோணி

நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 12 போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை டோணி பெறுவார். தற்போது அவர் அதிகபட்சமாக 11 போட்டிகளை வென்ற கேப்டன் என்ற கபில் தேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரன்கள்

ரன்கள்

அயர்லாந்துக்கு எதிராக 2007ம் ஆண்டில் கௌதம் கம்பீர் அதிகபட்சமாக 80 ரன்களும், 2011ம் ஆண்டில் யுவராஜ் சிங் 50 ரன்களும் அடித்தனர். இருவரும் அவுட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ்

யுவராஜ்

கடந்த உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய யுவராஜ் சிங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் எடுத்தார். (5/31)

கோஹ்லி

கோஹ்லி

தற்போதைய உலகக் கோப்பை அணியில் டோணி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் மட்டுமே ஏற்கனவே அயர்லாந்தை எதிர்த்து விளையாடியவர்கள்.

கேப்டன்

கேப்டன்

கடந்த உலகக் கோப்பை போட்டியை போன்று நாளைய போட்டியிலும் இந்தியாவுக்கு டோணியும், அயர்லாந்துக்கு வில்லியம் போர்டர்பீல்டும் கேப்டனாக உள்ளனர்.

போர்டர்பீல்டு

போர்டர்பீல்டு

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த அயர்லாந்து வீரர் வில்லியம் போர்டர்பீல்டு. அவர் 2011ம் ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 72 ரன்கள் எடுத்தார். டிரென்ட் ஜான்சன் மற்றும் ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Story first published: Monday, March 9, 2015, 11:34 [IST]
Other articles published on Mar 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+