Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதி போட்டியில் இத்தனை சுவாரசியங்கள்

மும்பை: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நடுவே நாளை மறுநாள், மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டங்கள் இரவு 7 மணிக்கு தொடங்கும்.

டோணியின் இந்தியா, டேரன் சம்மியின் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிகளின், இதற்கு முந்தைய உலக கோப்பை மோதல் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ:

முதல் முறை

முதல் முறை

இந்தியாவும்-வெஸ்ட் இண்டீசும் உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியொன்றில் மோதிக்கொள்வதுதான் இதுதான் முதல் முறையாகும்.

ஒன்றில் வெற்றி

ஒன்றில் வெற்றி

உலக கோப்பை டி20 போட்டி தொடரில் 2009, 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் லீக் ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 1 போட்டியில் இந்தியாவும், 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன.

மூன்றிலும் டோணிதான்

மூன்றிலும் டோணிதான்

மூன்று மோதல்களின்போதும், இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டது மகேந்திர சிங் டோணியாகும். 2009ல் மற்றும் 2010ல் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக கிறிஸ் கெயிலும், 2014ல் டேரன் சம்மியும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டனாக செயல்பட்டனர். நடப்பு கோப்பையிலும் சம்மிதான் கேப்டன்.

கெயில்

கெயில்

இரு அணிகளை சேர்ந்த வீரர்களில் உலக கோப்பையில் ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெயிலாகும். அவர் 2010 உலக கோப்பையில், ஒரு போட்டியில் 98 ரன்கள் எடுத்திருந்தார்.

பிராவோ

பிராவோ

2009 உலக கோப்பையின்போது, ட்வைன் பிராவோ 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

ராசியான மைதானம்

ராசியான மைதானம்

அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது மும்பை வான்கடே மைதானமாகும். இந்த மைதானத்தில்தான் 2011ல் நடந்த 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

3வது முறை

3வது முறை

இந்தியா 3வது முறையாக டி20 உலக கோப்பை போட்டி அரையிறுதியில் ஆடுகிறது. இதற்கு முன்பு மோதிய இரு அரையிறுதியிலும், இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் ஒருமுறை கோப்பையை வென்றுள்ளது. 2014ல் நடந்த பைனலில் யுவராஜ்சிங்கின் ஆமை வேக ஆட்டத்தால், இலங்கையிடம் தோற்றது.

நாலாவது முறை

நாலாவது முறை

வெஸ்ட் இண்டீஸ் 4வது முறையாக உலக கோப்பை அரையிறுதியில் ஆடுகிறது. 2009 மற்றும் 2014ம் ஆண்டு செமி பைனல்களில், வெஸ்ட் இண்டீஸ் தோற்றது. 2012ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது.

இரண்டாவது அணி

இரண்டாவது அணி

மும்பையில் வெஸ்ட் இண்டீசை மண்ண கவ்வ வைத்தால், உலக கோப்பை இறுதி போட்டிக்கு 3வது முறையாக முன்னேறிய அணி என்ற பெருமையை இந்தியா பெறும். ஏற்கனவே இலங்கை அணி மட்டும் இதுபோன்ற சாதனையை வைத்துள்ளது.

ஒரே கேப்டன்

ஒரே கேப்டன்

இந்தியா உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறினால், 3 டி20 உலக கோப்பை பைனல்களில் கேப்டனாக இருந்த ஒரே கேப்டன் என்ற பெருமை டோணிக்கு கிடைக்கும்.

Story first published: Tuesday, March 29, 2016, 17:12 [IST]
Other articles published on Mar 29, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+