Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

11ம் வகுப்பு மாணவரால் மிரண்டுபோன ஸ்மித், ஸ்டாய்னிஸ்.. யாருப்பா இந்த பையன்? 16 வயசுல இவ்வளவு திறமையா!

மொஹாலி: வலைபயிற்சியின் போது ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவரான சமீர் கானின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்பாக மொஹாலி வந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உடனடியாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

11th Std Student Sameer Khan troubles Steve Smith and Marcus Stoinis in the Nets in Mohali

அதற்கேற்ப உள்ளூர் கிரிக்கெட் வீரர்களில் சிறந்த ஸ்பின்னர்களை அழைத்து ஆஸ்திரேலிய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீசிய பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டாய்னிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா பகுதியைச் சேர்ந்த போர்வை விற்பனை செய்பவரின் மகன் தான் சமீர். 11ஆம் வகுப்பு படிக்கும் சமீர் கான், அண்மையில் பஞ்சாப் மாநில அணியின் யு19 உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 16 வயதிலேயே யு19 கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சமீரின் புகழ் அம்மாநிலம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது. ஜடேஜாவை போல் இடதுகை ஸ்பின்னரான சமீர், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வலைபயிற்சி பந்துவீச்சாளராக செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை உடனடியாக ஏற்ற சமீர், மொஹாலி வந்திருக்கிறார். கடந்த 2 நாட்களாக மொஹாலி மைதானத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள சமீர், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பந்துவீசி வருகிறார். 16 வயது சிறுவன் வீசப்போகும் பந்து நம்மை என்ன செய்துவிடும் என்று நினைத்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் சமீரின் பந்துவீச்சால் மிரண்டு போயுள்ளனர். நேற்று சமீர் கான் பந்துவீச்சை எதிர்கொண்ட ஸ்டாய்னிஸ், பந்துவீச்சின் போதே இரு முறை பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து சமீர் கான் பேசுகையில், ஸ்டாய்னிஸ்-க்கு பந்துவீசிய போது அவரை இரு முறை என்னால் வீழ்த்த முடிந்தது. ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்கள் என்னை எந்த லைன் மற்றும் லெந்திலும் வீச அறிவுறுத்தவில்லை. எனக்கு என்ன லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டுமோ, அதில்தான் வீசினேன். ஸ்டாய்னிஸ் பின் நகர்ந்து சென்று பேட்டிங் செய்தால், அவருக்கு கடினமாக இருப்பதாக நினைக்கிறேன். அதனால் பேக் ஃபூட் செல்லும் போதெல்லாம் கொஞ்சம் வேகமாக பந்துவீசினேன்.

நேற்று முன்தினம் ஸ்டீவ் ஸ்மித்திற்கு நீண்ட நேரம் பந்துவீசினேன். அதுவொரு சிறந்த அனுபவமாக மாறியது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பந்துவீசியது நல்ல அனுபவமாக இருந்தது. சில வீரர்கள் என்னை பாராட்டினார்கள். எங்கள் வீட்டில் பெற்றோருடன் 4 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார். நான் விளையாட்டில் கவனம் செலுத்த முழு ஒத்துழைப்பும் அளிக்கிறார்கள். அண்மையில் முடிந்த பஞ்சாப் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, September 22, 2023, 8:32 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+