For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த 15 வயது சிறுவன்.. ஆஃப்கானிஸ்தானின் அஸ்வின்.. யார் இந்த அல்லாஹ் முகமது?

மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் 15 வயதே ஆகும் இளம் வீரருக்காக பல அணிகள் குறிவைத்து போட்டிப்போட்டு வருவது தெரியவந்துள்ளது.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு இன்னும் 2 நாட்களே ( டிசம்பர் 23) மீதமுள்ளன. கேரள மாநிலம் கொச்சியில் இந்த மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அணிகளும் தங்களது தக்கவைப்பு பட்டியலை வெளியிட்ட பிறகு, மொத்தம் 87 இடங்கள் காலியாக உள்ளன. அதற்கான வீரர்கள் தேர்வு தான் நடைபெறவுள்ளது. இதில் 30 இடங்கள் அயல்நாட்டு வீரர்களுடையது ஆகும்.

ஐபிஎல் ஏலம் விவரம்

ஐபிஎல் ஏலம் விவரம்

87 இடங்களுக்காக உலகம் முழுவதும் இருந்து 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில் இருந்து மொத்தமாக 405 வீரர்களை பிசிசிஐ ஏலத்திற்காக இறுதி செய்துள்ளது. இந்நிலையில் அந்த 405 வீரர்களில் இருந்து அல்ஹா முகமது கசான்வார் எனும் வீரர் தனி கவனத்தை பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவரின் வயது வெறும் 15 என்பது தான்.

யார் இந்த கசான்வர்?

யார் இந்த கசான்வர்?

ரஷித் கான், முகமது நபி, முஜிப் உர் ரஹ்மான் போன்ற தரமான வீரர்கள் வந்த ஆஃப்கானிஸ்தானை சேர்ந்தவர் தான் இந்த முகமது கசான்வார். இவர் ஒரு வலதுகை ஆஃப் ஸ்பின்னர் ஆகும். 6.2 அடி உயரம் கொண்ட இவர் தனது கிரிக்கெட் பயணத்தை முதலில் வேகப்பந்துவீச்சாளராக தொடங்கி பின்னர், சுழற்பந்துவீச்சு நன்றாக வருகிறது என ஸ்டைலை மாற்றிக்கொண்டுள்ளார்.

அஸ்வினின் தீவிர ரசிகர்

அஸ்வினின் தீவிர ரசிகர்

கசான்வார் குறித்த சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், அவர் ரவிச்சந்திரன் அஸ்வினின் தீவிர ரசிகர் ஆவார். அவரை போன்றே உயரம் கொண்ட கசான்வார், அஸ்வினை பார்த்து தான் ஆஃப் ஸ்பின்னராக மாற நினைத்தேன் எனக்கூறியிருந்தார். மேலும், " இந்தியாவின் சாம்பியன் ஸ்பின்னர் அஸ்வின், அவரின் வேரியேஷன்கள் எப்போதுமே எனக்கு தூண்டுக்கோலாக இருக்கும். அதனால் தான் அவரை போன்று வர ஆசைப்படுகிறேன் எனக்கூறினார்.

அணிகளுக்குள் போட்டி

அணிகளுக்குள் போட்டி

அல்லாஹ் முகமது கசான்வர் அடிப்படை தொகையாக ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் பங்கேற்கிறார். உள்ளூர் போட்டிகளில் கலக்கியுள்ளதால், பல அணிகளும் இவருக்கு குறிவைத்துள்ளது. குறைந்த வயது கொண்ட இவரை, குறைந்த தொகைக்கு எடுத்து வைத்தால் நீண்ட காலத்திற்கு உதவுவார் என்ற திட்டத்தில் அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன. குறிப்பாக மும்பை, சிஎஸ்கே அணிகள் இந்த திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

Story first published: Wednesday, December 21, 2022, 13:13 [IST]
Other articles published on Dec 21, 2022
English summary
Meet 15 year old Allah Mohammad Ghazanfar youngest player in IPl 2023 mini auction, here is the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+