ஜஸ்ட் 16 வயது.. திடீர் வாய்ப்பு.. ஆச்சரியப்படுத்திய சிறுவன் - 20 வருட சாதனை "க்ளோஸ்"
இங்கிலாந்து: கவுண்டி கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார் 16 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர். அப்புறம் என்னப்பா, ஜோ ரூட் டீமுக்கு இப்பவே புக் பண்ணி வையுங்க
இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் என்பது மிகப் பிரபலமான First- Class கிரிக்கெட் தொடராகும். சர்வதேச இங்கிலாந்து அணிக்கு இங்கிருந்து தேர்வானவர்கள் ஏராளம். அதில், ஜாம்பவான்கள் ஆகியவர்களும் ஏராளம்.
அங்கு 1890 முதல் இத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், யார்க்ஷைர் அணி தான் 32 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அரைசதம்
இந்நிலையில், சசெக்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் டேனியல் இப்ராஹிம் எனும் 16 வயதே ஆன இளம் வீரர் புதிய சாதனையை படைத்திருக்கிறார். 16 வயது 299 நாட்கள் நிரம்பிய டேனியல் இப்ராஹிம் அரைசதம் (55) அடித்தது மூலம், கவுண்டி கிரிக்கெட் வரலாற்றை மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். சசெக்ஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 313ல் 55 ரன்கள் இப்ராஹிமுடையது தான்.

கடினமான நேரம்
இதுகுறித்து அவர், "நான் அணியில் விளையாடுவதாகக் கூறிய போது உண்மையில் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் நானும் மிகவும் உற்சாகமாக இருந்தேன். Headingley-யை விட சிறந்த மைதானங்கள் வேறேதும் இருக்க முடியாது. அதில் நான் அறிமுகமானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. புதிய பந்தை எதிர்த்து பேட் செய்வது மிகவும் கடினமாக இருந்தது.

பேட்டிலும், பேச்சிலும்
ஆனால், சக வீரர்களின் அறிவுரை எனக்கு உதவியது. நான் போட்டியின் போது எல்லாவற்றையும் கடினமாக உணர்ந்தேன், ஆனால் நான் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது, என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டியிருந்தது" என்று சிறிய வயதிலேயே அபாரமான மெச்சூரிட்டி காட்டுகிறார் இப்ராஹிம். பேட்டிலும், பேச்சிலும் கூட.

முறியடிப்பு
2001 ஆம் ஆண்டில் Nottinghamshire அணிக்காக, பிலால் ஷஃபாயத் தன்னுடைய 16 வயது 360 நாட்களில், 72 ரன்கள் அடித்த சாதனையை இப்ராஹிம் தற்போது முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில், 16 வயதுடைய இங்கிலாந்து சிறுவர்களில் 6 பேர் மட்டுமே அரைசதம் அடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications